பக்கம் எண் :

7

‘கற்கப் படுவோர் படாதோர் என்றா
என இரு வகையா ஈவோர் என்ப.

என்ப ஆதலின்.

ஈவோர் எனப்படும் ஆசிரியர் மாணாக்கன் அணுகிக் கற்றற்கு உரிய தகுதியுடையோரும், அத்தகுதி இல்லா தோரும் என இருவகைப்படுவர் என்று கூறுவர் சான்றோர். அவ்விரு திறத்தாரையும்.

குலன் அருள் தெய்வங் கொள்கை மேன்மை
கலைபயில் தெளிவு கட்டுரை வன்மை
நிலம்மலை நிறைகோல் மலர்நிகர் மாட்சியும்
உலகியல் அறிவோடு உயர்குணம் இனையவும்
அமைபவன் நூல்உரை ஆசிரி யன்னே.           நன்-26

எனவும்,

தான் பிறந்த குலத்திற்கேற்ற நலன், அருளுடைமை, தன்செயல் தெய்வத்திற்கு உகந்ததா என்று நோக்கி நன்னெறியிற் படுதற்கு ஆகும் தெய்வ நம்பிக்கை, பெருந்தன்மை, பலகலைகளையும் பயின்று தெளிந்த அறிவு, கற்றதை மாணாக்கன் உளம்கொள எடுத்து உரைக்கும் ஆற்றல், நிலம் மலை தராசுக்கோல் மலர் என்பனவற்றைப் போன்ற மாண்பு, உலகியலை உணர்ந்து ஏற்ப நடக்கும் அறிவு, நாண் ஒப்புரவு கண்ணோட்டம் வாய்மை முதலிய உயரிய குணங்கள் ஆகியவை தன்கண் அமையப்பெற்றவனே இலக்கண நூலைப் பாடஞ் சொல்லுதற்கு தகுதியுடைய ஆசிரியன் ஆவான்.

தெரிவரும் பெருமையும் திண்மையும் பொறையும்
பருவ முயற்சி அளவில் பயத்தலும்
மருவிய நன்னில மாண்பா கும்மே.

எனவும்,                                                    நன்-27