6 இரப்போன் அதனை உடையார்மாட்டு இரத்தலும், அவர்க்கு கருணைவர நடத்தலும் உடையன் ஆயினாற் போல, அவன் கற்றார்மாட்டு இரத்தலும் பிற்றைநிலை முனியாமையும் உடையன் ஆதல். கோடல் மரபு என்பது மாணாக்கன் கேட்கும் முறைமை என்றவாறு. அஃதாவது பசித்து ஊண்வேட்டு இரந்தாற்கு அதனை அளிப்பின் அவன் அதனை ஆர்வத்தோடு ஏற்றுச் சிதறாமல் அருந்திப் பசிதீர்ந்தாற்போல, ஆசிரியன் அளித்த பொருளை அவன் கொள்ளும் முறைமை. நூலே நுவல்வோன் நுவலுந் திறனே கொள்வோன் கோடல் கூற்றாம் ஐந்தும் எல்லா நூற்கும் இவை பொதுப்பாயிரம் நன்-3 என்பதொரு சூத்திரம்பற்றி ஐந்து என்பாரும் உளர். அஃது இலக்கணம் அன்று; அவயவமாகிய பாயிரத்துள் அவயவியாகிய நூல் அடங்காமையின். ‘நூலின் இயல்பே நுவலின் ஓரிரு. பாயிரந் தோற்றி’ என்ப ஆகலானும் நூன்முகம் முதலிய குறிகளானும் அஃது அதற்கு அவயவம் ஆதல் அறிக. நன்னூல் பொதுப்பாயிரத்துள் ஈவோன் தன்மை முதலிய நான்கனொடு நூலும் நுவலப்படும் என்று குறிப்பிடுகிறது. பாயிரம் என்பது நூலின் உறுப்புக்களுள் ஒன்று. இச்செய்தி பாயிரத்துக்கு நூல்முகம் என்ற பெயர் இருப்பதனாலும், நூலின் உறுப்புக்களுள் இருவகைப் பாயிரங்களும் குறிப்பிடப்பட்டிருத்தலானும் உணரப்படும். இனி, ஈவோர் கற்கப்படுவோரும் கற்கப்படாதோரும் என இருவகையர். |