5 பாயிரம், பொதுப்பாயிரம் எனவும் சிறப்புப்பாயிரம் எனவும் இரு வகைப்படும். பொதுப்பாயிரம் விளக்கும் ஈவோன் தன்மை, ஈதல் இயற்கை, கொள்வோன் தன்மை, கோடல் மரபு என்பன எல்லா நூல்களுக்கும் பொதுவான செய்திகளாம். சிறப்புப்பாயிரம் உணர்த்தும் ஆக்கியோன் பெயர் முதலிய பதினொன்றும் ஒவ்வொரு நூலுக்கும் சிறப்பாக அமையும் செய்திகளாம். அவற்றுள், பொதுப்பாயிரம் ஈவோன் தன்மை, ஈதல் இயற்கை, கொள்வோன் தன்மை, கோடல் மரபு என நான்கு வகைத்து, ‘ஈவோன் தன்மை ஈதல் இயற்கை கொள்வோன் தன்மை கோடல் மரபு என ஈரிரண்டு என்ப பொதுவின் தொகையே’ என்ப ஆதலின், ஈவோன் தன்மை என்பது ஆசிரியனது தன்மை என்றவாறு. அஃதாவது ஈதல் தொழில் நடைபெற வேண்டின், இரப்போன்வேண்டும் பொருள் உடையனாம் தன்மையும், அதனை ஈதற்கு ஏதுவாகிய இரக்கம் முதலிய குணன் உடையனாம் தன்மையும், ஈவோனுக்கு இன்றியமையாது இருத்தல் வேண்டும் ஆதலின், ஆசிரியன் அவற்றை உடையனாதல். ஈதல் இயற்கை என்பது ஆசிரியன் நூல் உரைக்கும் முறைமை என்றவாறு. அஃதாவது பசியால் இரப்போற்கு அவன் பசி அளவு அறிந்து முகம் மலர்ந்து இன்சொல் கூறி உணவு அளிப்பது போல, மாணாக்கனுக்கு அவன் அளிக்கும் முறைமை. கொள்வோன் தன்மை என்பது மாணாக்கனது தன்மை என்றவாறு. அஃதாவது பசித்து ஊண்வேட்டு |