பக்கம் எண் :

11

மொழிகுணம் இன்மையும் இழிகுண இயல்பும்
அழுக்காறு அவாவஞ்சம் அச்சம் ஆடலும்
கழற்குடம் மடற்பனை பருத்திக் குண்டிகை
முடத்தெங்கு ஒப்பென முரண்கொள் சிந்தையும்
உடையோர் இலர் ஆ சிரியரா குதலே.                 நன்-31

எனவும்.

ஆசிரியருக்கு ஓதப்பட்ட நற்குணம் அமையப் பெறாமையோடு, ஆசிரியருக்கு இருத்தல் ஆகா இழிந்த குணங்களைத் தம் இயல்பிலேயே பெற்றிருத்தலும், பொறாமை பேராசை வஞ்சனை பிறரை அஞ்சுவித்தல் ஆகிய தீப்பண்புகளும், கழல் பெய்குடம் மடற்பனை பருத்திக்குண்டிகை முடத்தெங்கு என்பனவற்றை ஒத்த மாறுபட்ட மனக்கருத்தும் பெற்றிருத்தலும் ஆகிய நிலையை உடையோர் ஆசிரியர் ஆதற்குத் தகுதி உடையர் அல்லர் என்றவாறு.

பெய்த முறையன்றிப் பிறழ உடன்தரும்
செய்தி கழற்பெய் குடத்தின் சீரே.                      நன்-32

எனவும்.

தன்னிடம் கழற்சிக்காய் பெய்யப்பட்ட முறைக்கு நேர்மாறாகத் தன்னிடத்திலிருந்து வெளிப்படுக்கும்போது வெளிவிடும் செயல் கழல்பெய் குடத்தின் சிறப்பாம். அதுபோல, தான் முறையாகக் கற்றனவற்றைக் கற்பிக்கும்போது, அடியோடு முறைமாற்றிக் கற்பிக்கும் செயல் ஆசிரியர் ஆதற்குத் தகுதியற்றவர் இயல்பாம்.

தானே தரக்கொளின் அன்றித் தன்பால்
மேவிக் கொளக்கொடா இடத்தது மடற்பனை.           நன்-33

மடல்மிக்க பனைமரம், தானே காயினை வழங்குவதல்லது தன்மீது பிறர் ஏறிப் பறித்துக்கொள்ள