12 வாய்ப்பினை அளிக்காது, அதுபோல, தீய ஆசிரியன் தானே மனம் விரும்பிப் பாடம் சொல்லுவனேயன்றிப் பிறர் தன்னை வேண்டிக் கேட்ட அளவில் பாடஞ் சொல்லும் இயல்பினைக் கொள்ளான் என்பது. அரிதிற் பெயக்கொண்டு அப்பொருள் தான்பிறர்க்கு எளிது ஈவில்லது பருத்திக் குண்டிகை. நன்-34 பருத்தியடைக்கப்பட்ட குடுக்கை, தன்னுள் பருத்தி அடைக்கப்பட்ட காலத்தும் மிக்க முயற்சியோடு சிறிது சிறிதாக அடைக்கப்பட்டு, தன்னிடத்திலிருந்து பருத்தியை வெளியேற்றுங் காலத்தும் சிறிதுசிறிதாகவே வெளிவிடும் இயல்பினது. அதுபோல, தீய ஆசிரியன் தான் கற்ற காலத்தும் தன் ஆசிரியருக்குத் தான்கொண்ட சிறுபயனுக்காக மிக்க முயற்சிச் செலவை ஏற்படுத்தி தான் பாடஞ் சொல்லுங் காலத்தும் மாணாக்கன் மிகுதியும் கல்விப்பயன், கொள்ளும் தகுதியுடையவன் ஆயினும் அவன் நேரத்தை வீணாக்கி அவனுக்குச் சிறிது சிறிதாகவே கற்பிக்கும் இயல்பினன் ஆவான் என்பது. பல்வகை உதவி வழிபடு பண்பின் நல்லோரொழித் தல்லோர்க்கு அளிக்கும்முடத் தெங்கே நன்-35 எனவும் ஓதிய இவற்றானும் முறையே காண்க. வளைந்த தென்னைமரம், தனக்கு நீர் ஊற்றல் எருப்பெய்தல் முதலிய நலன் பலவும் நல்குபவருக்குப் பயன்தாராது, ஒரு தொடர்பும் அற்ற பிறருக்கே பயன்படும். அதுபோல, தனக்குப் பொருளானும் பணிவிடையானும் பயன்படும் மாணாக்கனை விடுத்து, தன்னொடு முன் தொடர்பே ஏதும் இல்லாத அயலவனுக்குத் தன் கல்விப்பயனைத்தரும் இயல்பினன் தீ ஆசிரியன் என்பது. |