பக்கம் எண் :

100

‘அஇ உஅம் மூன்றும் சுட்டு’.           தொல்.31

எனப் பொதுப்படக் கூறிச்

‘சுட்டுமுதல் உகரம்’ 176 எனவும்,

‘சுட்டுமுத லாகிய ஐஎன் இறுதி’ 177 எனவும்,

பிறாண்டும் உறுப்பாய் வருவனவற்றையும்,

‘சுட்டின் முன்னர் ஞநமத் தோன்றின்’ 205 எனவும்

‘சுட்டின் இயற்கை’ 238 எனவும், பிறாண்டும்

சார்ந்து வருவனவற்றையும் சுட்டு என்று ஆளுதலானும் அவர்க்கு அது கருத்து அன்று என்க.

விளக்கம் : தொகை வகை விரிபடச் செய்தல்- தொகை உயிர்; வகை குறில் நெடில்; விரி இந்நூற்பாவில் விரித்துக் கூறப்படும் ஏனையபோல்வன. தொல்காப்பியனாருக்கு யா என்ற வினாவும் உடன்பாடாதல் ‘யாது யா யாவை என்னும் பெயர்’ தொல். சொல் 169 என்ற நூற்பா அடியான் பெறப்படினும், உயிரெழுத்தினான் ஆகிய வினா இடைச்சொற்களையே நூல்மரபில் சுட்டிய புகுந்தார் ஆகலான், ‘ஆ ஏ ஓ அம் மூன்றும் வினாஅ.’ தொல்.32 என்றே நூற்பா யாத்துள்ளார். இந்நூலாசிரியர், சுருக்க நூலாதலின் இதன்கண் யா வினா வினையும் ஈண்டே குறிப்பிட்டார்.

அ இ உ என்பனவும், ஆயா ஏ ஓ என்பனவும்,

‘தன்னை உணர்த்தின் எழுத்தாம் பிறபொருளைச்
சுட்டுதற் கண்ணேயாம் சொல்’

என்ப ஆதலின், சுட்டு வினா எனப் பெயர் இடப் பட்டனவே யன்றிச் சுட்டெழுத்து, வினாவெழுத்து எனப் பெயரிடப்படாமையும், சுட்டிடைச்சொல் வினாவிடைச் சொல் என்றே பெயரிடப்பட வேண்டிய திறமும் அறிக.