104 அமைதி சுட்டெழுத்து என்ற குறியீடு பொருந்தாது என்பதும், தனிவருதலும் முதல் வருதற்கண் அடங்கும் என்பதும் இந்நூலாசிரியர் தந்துள்ள விளக்கத்தான் உணரப்படும். இனி, மயிலைநாதர் அ இ உ என்னும் இம்மூன்றும் மொழி முதற்கண்ணே தனித்து நிற்பின் சுட்டு என்னும் குறியவாம் என்று கூறிப் புறச்சுட்டிற்கே எடுத்துக் காட்டுக்கள் தந்துள்ளார். அதனைக் கண்டு, நூற்பாக் கருத்தினை அவர் உள்ளவாறு உணராமையை உட்கொண்டு இலக்கணக் கொத்து நூலார் குறிப்பிடும் செய்திகள் பின்வருமாறு : “உபலக்கணமாவது ‘அ இ உம் முதல் தனிவரின் சுட்டே’ (நன். 66) என்புழி, முதற் கூடிவரின் சுட்டே என்றும் பொருள் கொள்ளுதல். இவ் விலக்கணம் நோக்காது தனித்து நிற்பின் சுட்டோ. கூடிநிற்பின் சுட்டு அன்றோ என்று கருதி, நன்னூலார்க்குப் பின்னூலார் இச்சூத்திரத்திற்கு அளவிறந்த குற்றம் கூறினர். அது நிற்க; அவர் எழுத்திற்குப் பெயரிடுதல் நோக்கியும். ‘எகர வினாமுச் சுட்டின் முன்னர்’ 163 எனச் சந்தி நோக்கியும், ‘இவை அடை சுட்டு வினா’ 276 எனப் பெயரிடுதல் நோக்கியும், ‘தூக்கில் சுட்டு நீளின்’ 163 என யாப்பு நோக்கியும் இங்ஙனம் கூறி, பின், ‘சுட்டுயா எகர வினாவழி’ 106 ‘வினைத்தொகை சுட்டுஈறு ஆகும் உகரம்’ 179 ‘சுட்டு வகரம் மூவினம் உற’ 235 ‘வவ்விறு சுட்டிற்கு அற்றுஉறல் வழியே’ 250 ‘சுட்டின்முன் ஆய்தம் அன்வரின் கெடுமே’ 251 ‘அதுமுன் வரும் அன்று’ 180 |