பக்கம் எண் :

105

என்று கூடி நிற்பினும் சுட்டு என்று கூறினர். இவ் விலக்கணங்களை நோக்கிலர். அது நிற்க; ‘தனிவரினும் சுட்டு’ நன்.66 என்னும் சூத்திரம், ‘இன் என வரூஉம்’ தொல். 131 என்னும் சூத்திரம் போல விகாரப்பட்டது என்று யாப்பு விதியையும் நோக்கிலர். அது நிற்க; ஒருமொழி ஒழிதன் இனங்கொளற்கு உரித்தே, என்னும் சூத்திரப் பொருளையும் நோக்கிலர். அது நிற்க; ‘ஒன்றினம் முடித்தல் தன்னினம் முடித்தல்’ முதலிய உத்தியையும் நோக்கிலர். அது நிற்க ‘வரின்’ என்னும் எச்சம் பெரும்பான்மையும் கூடிநின்று சுட்டுப் பெயராம் என்று பொருள் தருதலையும் நோக்கிலர். அது நிற்க; ‘முதல்வரின் சுட்டே, தனிவரின் சுட்டே’ என்ற பொருள்கோள் இலக்கணமும் நோக்கிலர். அதுபற்றித் தமக்கு என ஒன்று இலரும் அதுவே. உரைப்பார் உரைப்பவைக்கு எல்லாம் யாம் என்செய்வோம் என்க.”

இவ்வாறு இலக்கணக்கொத்து எட்டாம் நூற்பாவுரையுள் அவ்வாசிரியர் சொற்றனவும் காண்க.

ஒத்த நூற்பாக்கள்:

‘ஒளகார இறுவாய்ப்
பன்னீரெழுத்தும் உயிர்என மொழிப.’           தொல்.8

‘அவற்றுள் அ இ உ
எ ஒ என்னும் அப்பால் ஐந்தும்
ஓரளபு இசைக்கும் குற்றெழுத்து என்ப.      3

ஆ ஈ ஊ ஏ ஐ
ஓ ஒள என்றும் அப்பால் ஏழும்
ஈரளபு இசைக்கும் நெட்டெழுத்து என்ப.      4

அஇ உஅம் மூன்றும் சுட்டு.      31

ஆ ஏ ஓஅம் மூன்றும் வினாஅ.      32

அம்முதல் ஈராறு ஆவி...           நன்.63

அவற்றுள், அ இ உஎ ஒக்குறில் ஐந்தே.      64