பக்கம் எண் :

106

ஆஈ ஊஏ ஐஓ ஒளநெடில்.      65

அஇ உம் முதல் தனிவரின் சுட்டே.      66

எயா முதலும் ஆஓ ஈற்றும்
ஏஇரு வழியும் வினாவா கும்மே.      67

ஈராறில் ஐந்து குறில்நெடில் ஏழ். வீ.2

ஆன்றஉயிர் ஈராறும் ஐங்குறில் ஏழ்நெடிலாம்.           நே.2

அம்முதல் ஈராறு உயிர்... ...
குறில்அ இஉஎ ஒவ்வைந் தேநெடில்
ஆஈ ஊஏ ஐஓ ஒள ஏழே. தொ. வீ. 8

அகரம்முதல்உயிர் ஆறிரண்டு ஆகும்.           மு. வீ. எ. 6

அச்சு ஆவி சுரம்பூத மாம்உயிர் என்ப.      7

அ இ உஎ ஒக்குறில் ஆகும்.      8

குறுமை இரச்சுவம் குறில்எனப் படுமே.      9

ஆஈ ஊஏ ஐஓ ஒளநெடில்.      10

நெடுமையும் தீர்க்கமும் நெட்டுபில் ஆகும்      11

அஇ உச்சுட்டு ஆகும் என்ப.      26

எயா வினாஎன்று இசைக்கப் படுமே.      27

காட்டல் குறித்தல்சுட் டாம்கரு திடினே.      29

வினவல் கடாவல் வினாஎனப் படுமே.      30

ஆஈ ஊஏ ஐஓ ஒள என்று
ஏழும் ஏழ்இசைக்கு எய்தும்அக் கரங்கள்.-பிங்கலம்

மெய் எழுத்துக்கள்

7 ககரம் முதல்மூ வாறும்மெய் அவற்றுள்
கசட தபற வல்லெழுத்து மெல்லெழுத்து
ஙஞண நமன இடைஎழுத்து உணரின்
யரல வழள என்மனார் புலவர்.