பக்கம் எண் :

109

ஐகார ஒளகாரங்கள் குறிய எழுத்தின் நெடிய ஆதற்குக் குற்றெழுத்து ஆகிய இனம் தமக்கு இலவேனும், அளபு ஒப்புமையான் நெடிலாம் எனக் கொள்க. மெய் குற்றெழுத்தின் குறுகி அரை அளபு இசைக்குமேனும், குற்றெழுத்து எனப் பெறா, ஓரளபு இசைக்கும் மெய் தமக்கு இனமாக இன்மையின் 7

விளக்கம்:- உயிரின் பரியாயப் பெயர் ஆவி, மெய்யின் பரியாயப் பெயர் உடம்பு உறுப்பு ஒற்று உடல் புள்ளி, ஆய்தத்தின் பரியாயப் பெயர் அஃகேனம் தனிநிலை எனக்கொள்க. ஏகாரம் ‘பிரிநிலை வினாஎண் ஈற்றசை தேற்றம், இசைநிறை’ என்ற ஆறு பொருள்களிலும், ஓகாரம் ‘ஒழியிசை வினாச்சிறப்பு எதிர்மறை தெரிநிலை, கழிவு அசைநிலை பிரிப்பு’ என்ற எட்டுப் பொருள்களிலும் வருமாறு இடையியலான் அறிக. ஏகாரம் இசைநிறைப் பொருளிலும் வினாப் பொருளிலும் முதற்கண் வருதல் உண்மையின், ‘பெரும்பான்மையும் ஈற்றின்கண் வரும்’ என்று கூறினார்.

உயிர்மெய் ஆகிய காலத்தும்..............பெறுதலும்:

‘தம்இயல் கிளப்பின் எல்லா எழுத்தும்
மெய்நிலை மயக்கம் மானம் இல்லை’.           தொல்.47

பன்னீருயிரும் மெய்யின் தன்மையிலே தம்முடைய தன்மை மயங்கிற்றாகப் பெயர் கூறின் குற்றம் இல்லை என்றவாறு, மெய்யின் தன்மையாவது வன்மை மென்மை இடைமை; தம் இயலாவது உயிர்த்தன்மை; என்றது. வல்லெழுத்து மெல்லெழுத்து இடையெழுத்து என உயிர் மெய்க்கும் பெயர் இட்டு ஆளுதல் கூறிற்று’ என்ற நச்சினார்க்கினியர் கருத்தை உட்கொண்டு இது சொற்றதாம்.

வல்லினம் மெல்லினம் இடையினம் என்ற குறியீடுகள் தனி எழுத்தை உணர்த்தாது, அவ்வவ்வினம் பற்றிய