பக்கம் எண் :

110

எழுத்துக்களை எல்லாம் தொகுதியாக உணர்த்தின. ‘வல்லினம் கல்மேல் விரல் வைத்தாற்போலவும், மெல்லினம் மணல்மேல் விரல் வைத்தாற் போலவும், இடையினம் மண்மேல் விரல் வைத்தாற் போலவும் கொள்க’- என நேமிநாதஉரை விளக்கம் தரும்.

ஆட்சி- பின்னர்க் கசடதபற என்பனவற்றை குறிக்க வேண்டும். இடங்களில் எல்லாம் வல்லினம் என்ற தொகுதிப் பெயர் கூறியே சுட்டுதல் போல்வது. குறியீடுகள் எல்லாம் காரணம் பற்றி அமைக்கப்பட்டுப் பின்னர்ச் சுருக்கமான முறையில் எடுத்து ஆளுவதற்காகவே எழுந்தன என்று அறிக.

‘ஒளகார இறுவாய்ப்
பன்னீர் எழுத்தும் உயிர்என மொழிப’           தொல். 8

என்ற நூற்பா உரையில் மெய் பதினெட்டினையும் இயக்கித்தான் அருவாய் வரிவடிவு இன்றி நிற்றலின் உயிராயிற்று எனவும்,

‘னகர இறுவாய்ப்
பதினெண் எழுத்தும் மெய்என மொழிப’           தொல். 9

என்ற நூற்பா உரையில், இதுவும் ஆட்சியும் காரணமும் நோக்கிய குறி; என்னை? பன்னீருயிர்க்கும் தான் இடம் கொடுத்து அவற்றால் இயங்கும் தன்மை பெற்ற உடம்பாய் நிற்றலின் எனவும்,

‘அஇஉஅம் மூன்றும் சுட்டு’           தொல். 31

என்ற நூற்பா உரையில், இதுவும் ஆட்சியும் காரணமும் நோக்கிய குறி, சுட்டியறியப்படும் பொருளை உணர்த்தலின் எனவும்

‘ஆஏ ஓஅம் மூன்றும் வினாஅ’           தொல். 32

என்ற நூற்பா உரையில், இதுவும் ஆட்சியும் காரணமும் நோக்கிய குறி, வினாப்பொருள் உணர்த்தலின் எனவும்.