111 ‘வல்லெழுத்து என்ப கசட தபற’ தொல். 19 என்ற நூற்பா உரையில் ஒழிந்த மெல்லெழுத்தையும் இடையெழுத்தையும் நோக்கத் தாம் வல்லென்று இசைத்தலானும், வல்லென்று தலைவளியாற் பிறத்தலானும் வல்லெழுத்தாயின எனவும். ‘மெல்லெழுத்து என்ப ஙஞண நமன’ தொல்.20 என்ற நூற்பா உரையில், மெல்லென்று இசைத்தலானும், மெல்லென்ற மூக்குவளியால் பிறத்தலானும் மெல்லெழுத்து ஆயின எனவும். ‘இடையெழுத் தென்ப யரல வழள’ தொல்.21 என்ற நூற்பா உரையில், இடை நிகரவாய் ஒலித்தலானும், இடை நிகர்த்தாய மிடற்றுவளியால் பிறத்தலானும் இடையெழுத்து ஆயின எனவும். ‘ஆஈஊஏஐ ஓ ஒள என்னும் அப்பால் ஏழும் ஈரளபு இசைக்கும் நெட்டெழுத்து என்ப’ தொல். 4 என்ற நூற்பா உரையில், ஐகார ஒளகாரங்கள் குறிய எழுத்தின் நெடிய ஆதற்குக் குற்றெழுத்தாகிய இனம் தமக்கு இலவேனும், மாத்திரை ஒப்புமையான் நெட்டெழுத்து என்றார் எனவும். ‘அவற்றுள், அஇஉ எஒ என்னும் அப்பால் ஐந்தும் ஓரளபு இசைக்கும் குற்றெழுத்து என்ப’ தொல். 3 என்ற நூற்பா உரையில், தமக்கு இனமாயவற்றின்கண் அல்லது குறுமை நெடுமை கொள்ளப்படாமையின், ஒரு மாத்திரை அளவிற்பட்டு அமைந்தனவாம் குற்றெழுத்தின் குறுகிமெய் அரை மாத்திரை பெற்றதேனும் குற்றெழுத்து எனப் பெயர் பெறாதாயிற்று, ஒரு மாத்திரை பெற்ற மெய் தனக்கு இனமாக இன்மையின். |