பக்கம் எண் :

112

எனவும் நச்சினார்க்கினியர் குறிப்பிட்ட செய்திகளையெல்லாம் தொகுத்து இயைபுபடுத்தி இவ்வாசிரியர் இந்நூற்பா உரையில் சுட்டியுள்ளமை காண்க.

‘முதலெழுத்துக்களே தம்மொடு தாம் சார்ந்தும் இடம் சார்ந்தும் பற்றுக்கோடு சார்ந்தும் சார்பெழுத்தாயின’ என்பது மயிலைநாதர் கருத்து. (நன். 60ஆம் நூற்பா உரை)

உயிர்மெய், உயிர்அளபெடை என்பனவற்றில் முதல் எழுத்துக்கள் தம்மொடு தாம் சார்ந்தே சார்பெழுத்து ஆயின.

‘ணன முன்னும் வஃகான் மிசையும்’ ஆகிய இடனும் ஈற்றில் வரும் வல்லினமெய் ஆறு ஆகிய பற்றுக்கோடும் சார்ந்து முறையே மகரக்குறுக்கமும் குற்றியலுகரமும் தோன்றின. இவ்வாறாகித் தம் இயல்பு ஆகிய மாத்திரையில் திரிந்து, சார்பு பற்றி வேறுபட்டு இவை வேற்றுப் பெயருடன் சார்பு எழுத்தாயின. இவை முதல் எழுத்துப்போல அன்றி, மொழியிடைச் சார்த்தியே கூறப்படவேண்டிய நிலை அறியத் தக்கது.

ஒத்த நூற்பாக்கள் :

‘னகார இறுவாய்ப்
பதினெண் எழுத்தும் மெய் என மொழிப’           தொல்.9

‘வல்லெழுத்து என்ப கசட தபற.’      19

‘மெல்லெழுத்து என்ப ஙஞண நமன.’       20

‘இடையெழுத்து என்ப யரல வழள.’      21

‘கமமுதல், மெய்மூ வாறுஎன விளம்பினர் புலவர்’           நன்.63

‘வல்லினம் கசட தபறஎன ஆறே’.      68

‘மெல்லினக் ஙஞண நமனஎன ஆறே’.      69

‘இடையினம் யரல வழளஎன ஆறே.’      70

‘கம்முன் பிறந்த பதி னெட்டுமெய்’ வீ.1

‘ஙஞண நமன என்று செறிந்தன மெல்லினம்’      1