பக்கம் எண் :

113

‘இடையா முறிந்தன யம்முதல் ஆறும்.’      1

‘செப்பாத வல்லினம்.’      7

‘என்றமெய் மூவாறும் எண்ணுங்கால்-ஊன்றிய
வன்மை மென்மை இடைமையாம்’           நே.2

‘கம்முதல் மூவா றும்உடல் அவற்றுள்
வலிகசட தபற மெலிஙஞண நமன
இடையரல வழள எனமூ வினமே.’           தொ.வி. 19

‘ககரம் முதல் மூவாறும் காத்திர மாகும்.’           மூ.வீ.எ.12

‘ஊமையும் ஒற்றும் உடலெனப் படுமே.’      13

‘அவற்றுள்,
வல்லெழுத்து என்மனார் கசட தபற.’      14

‘வன்மைவன் கணம்வலி வல்லெழுத் தாகும்.’      15

‘மெல்லெழுத்து என்மனார் ஙஞண நமன.’      16

‘மென்மைமென் கணம்மெலி மெல்லெழுத் தாகும்.’      17

‘இடையெழுத்து என்மனார் யரல வழள.’      18

‘இடைமை இடைக்கணம் இடைஇடை யெழுத்தே.’      19

இனமும் முறையும்

8)தோற்றம் அளவு செய்கை பொருள்வடிவு
ஏற்றன ஒத்தலின் ஏற்புடை இனத்தினும்
சிறப்பினும் நெறிப்படச் செறிந்துஈண்டு அம்முதல்
நடத்தல் தானே முறையெனல் வேண்டும்.

இது நிறுத்த முறையானே முறை கூறுகின்றது.

(இ-ள்.) இடனும் முயற்சியும் ஆகிய பிறப்பும் மாத்திரையும் புணர்ச்சிக்கண்படும் செய்கையும் பொருளும் வடிவும் ஆகிய இவற்றுள் பொருந்தியன ஒத்தலான், ஒன்றற் ஒன்றுரு பொருத்தம் உடைய இனத்தினாலும் சிறப்பினாலும் ஒழுங்குபட ஒன்றன்பின் ஒன்று இயைந்து நெடுங்கணக்கினுள் அகரம் முதலாக