114 நடத்தல்தானே நூலுள்ளும் முறை என்று சொல்லுதல் விரும்பும் ஆசிரியன் என்றவாறு. ‘நெறிப்பட’ என்றதனால், தம்மில் சேர்ந்து வரும் சொற்கள் பல ஆதலும் சந்த இன்பத்திற்கு இயைபு உடைமையும் இன்னோரன்ன பிறவும் இனம் ஆதற்கும், இனம் ஆதற்கு இயைபு உடையன முறை ஆதற்கும் கருவியாம் எனக் கொள்க. முறைக்கு ஏதுச்செய்வார் போன்று இனம் அடைத்தலும் செய்தார் என்பதூஉம் ஆயிற்று. ஒப்புழி முழுதும் ஒத்தலும் ஒருபுடை ஒத்தலும் ஓர்ந்து உணர்க. வரலாறு: அ ஆக்கள் பிறப்பானும் செய்கையானும் அங்கு ஆங்கு என்னும் பொருளானும் வடிவானும், இஈக்கள் பிறப்பானும் செய்கையானும், இங்கு ஈங்கு என்னும் பொருளானும் உஊக்கள் பிறப்பானும் செய்கையானும், உங்கு ஊங்கு என்னும் பொருளானும் வடிவானும், எஏக்கள் பிறப்பானும் செய்கையானும், எவன் ஏவன் என்னும் பொருளானும், வடிவானும், ஒஓக்கள் பிறப்பானும் செய்கையானும் வடிவானும் ஒத்து ஓர் இனம் ஆயின. இன்னும் இவை அளபு எடுப்புழி நெட்டெழுத்தோடு குற்றெழுத்திற்கு ஓசை இசையுமாற்றானும் ஓர் இனமாம் என்று உணர்க. குற்றெழுத்துக்களை முன்னாகக்கூறி அவற்றிற்கு இனம் ஒத்த நெட்டெழுத்துக்களை அவற்றின் பின்னாகக் கூறினார், ஒரு மாத்திரை கூறியே இரண்டு மாத்திரை கூறவேண்டுதலின்; அன்றி இரண்டை முன்கூறின் ஆகாது. ஒன்று நின்று அதனொடு பின்னரும் ஒன்று கூடியே இரண்டு ஆவதன்றி, இரண்டு என்பது ஒன்று இன்று ஆதலின், இதனால் ஒன்று தான் பல கூடியே எண் விரிந்தது என்று உணர்க. கஙக்களும், சஞக்களும், டணக்களும், தநக்களும், பமக்களும் முயற்சியானும் மாத்திரையானும் செய்கை |