பக்கம் எண் :

115

யானும், யரக்கள் இடத்தானும் செய்கையானும் மாத்திரையானும், லவக்கன் இடத்தானும் மாத்திரையானும் கல்வலிது சொல்வலிது என்றாற்போலத் தம்மில் சேர்ந்துவரும் சொற்கள் பலவாதலானும், ழளக்கள் இடத்தானும் மாத்திரையானும் இடைஎழுத்து யரலவழள என்றால் சந்த இன்பத்திற்கு இயைபு ஆதலானும். றனக்கள் முயற்சியானும் மாத்திரையானும் செய்கையானும் ஒத்து ஓர் இனம் ஆயின.

இனி, முறை வருமாறு:

‘அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு’

எனத் திருவள்ளுவனார் உவமை கூறியவாற்றானும், கண்ணன் ‘எழுத்துக்களுள் அகரமாக நிற்கின்றேன் யான்’ என உண்மை கூறியவாற்றானும், இறைவன் எல்லாப் பொருளின்கண்ணும் கலந்து அவற்றின் தன்மையாயே நிற்குமாறு எல்லார்க்கும் ஒப்பமுடிந்தாற் போல, அகரமும் எல்லா எழுத்தின்கண்ணும் கலந்து அவற்றின் தன்மையாயே நிற்கும்என்பது சான்றோர்க்கு எல்லாம் ஒப்ப முடிந்தது ஆகலின், அச்சிறப்பு நோக்கி எல்லா எழுத்திற்கும் முன்னர் அகரமும், அதற்கு இனம் ஆகலின் அதன்பின்னர் ஆகாரமும், பிறப்பும் செய்கையும் சுட்டுப் பொருட்டாதலும் அகரத்தொடு அளவும் ஒத்தலின் அதன் பின்னர் இகரமும், அதற்கு இனம் ஆதலின் அதன் பின்னர் ஈகாரமும், இடமும் செய்கையும் சுட்டுப்பொருட்டாதலும் இகரத்தொடு அளவும் ஒத்தலின் அவற்றின் பின்னர் உகரமும், அதற்கு இனம் ஆகலின் அதன் பின்னர் ஊகாரமும், இடமும் செய்கையும் உகரத்தொடு அளவும் ஒத்தலின் அவற்றின் பின்னர் எகரமும், அதற்கு இனம் ஆதலின் அதன் பின்னர் ஏகாரமும், பிறப்பும் செய்கையும் ஏகாரத்தொடு அளவும் ஒத்தலின் தனக்குஇனமாகிய குற்றெழுத்து இன்றேனும் அதன்பின்னர் ஐகாரமும், இடமும் செய்கையும் ஒத்தலின்