116 அதன் பின்னர் ஒகரமும், அதற்கு இனம் ஆதலின் அதன் பின்னர் ஓகாரமும், பிறப்பும் செய்கையும் வடிவும் ஓகாரத்தொடு அளவும் ஒத்தலின் தனக்கு இனமாகிய குற்றெழுத்து இன்றேனும் அவற்றின் பின்னர் ஒளகாரமும் தம்முள் இயைய வைக்கப்பட்டன. முதல்நாவும் முதல்அண்ணமும் உறப்பிறத்தலான் மெய்களின் முன்னர்க் ககரமும், அதற்கு இனம் ஆதலின் அதன்பின்னர் ஙகரமும், இடைநாவும் இடைஅண்ணமும் உறப்பிறத்தலானும் அளவானும் ககரத்தொடு இடம் ஒத்தலானும் அவற்றின் பின்னர்ச் சகரமும், அதற்கு இனம் ஆதலின் அதன் பின்னர் ஞகரமும், நுனிநாவும் நுனிஅண்ணமும் உறப்பிறத்தலானும் அளவானும் சகரத்தொடு இடம் ஒத்தலானும் அவற்றின் பின்னர் டகரமும், அதற்கு இனம் ஆதலின் அதன் பின்னர் ணகரமும், நுனிநாவும் அண்பல் முதலும் உறப்பிறத்தலானும் அளவானும் டகரத்தொடு இனம் ஒத்தலானும் அவற்றின் பின்னர்த் தகரமும், அதற்கு இனம் ஆகலின் அதன் பின்னர் நகரமும், இதழ் இயையைப் பிறத்தலானும் அளவானும் தகரத்தொடு இனம்ஒத்தலானும் அவற்றின் பின்னர்ப் பகரமும், அதற்கு இனம் ஆதலின் அதன் பின்னர் மகரமும் தம்முள் இயைய வைக்கப்பட்டன. வல்லெழுத்துக்களை முன்னாகக்கூறி, அவற்றிற்கு இனம்ஒத்த மெல்லெழுத்துக்களை அவற்றின் பின்னாகக் கூறி, இடையெழுத்து ஆறனையும் அவற்றின் பின்னாகக் கூறினார். வல்லெழுத்துள் நான்கும் மெல்லெழுத்துள் மூன்றும் இடைஎழுத்துள் இரண்டும் மொழிக்கு முதலாதல் நோக்கி என்று உணர்க. உயிர்கள் போல மிடற்றுப் பிறந்தவளி கண்ணுற்று அடையப் பிறத்தலான் இடையெழுத்துக்களுள் முன்னர் யகரமும், அதற்கு இனம் ஆதலின் அதன் பின்னர் ரகரமும், இடமும் அளவும் ஒத்தலானும் சந்த இன்பத்திற்கு இயைபு உடைமையானும் அவற்றின் பின்னர் |