118 எனக் கூறிய ஆசிரியர் தொல்காப்பியனார் ஒத்த குற்றெழுத்து இல்லா ஐகார ஒளகாரங்களுக்கு இசை நிறைப்பன யாவை என ஆசங்கித்து, ‘ஐஒள என்னும் ஆயீர் எழுத்திற்கு இகர உகரம் இசைநிறைவு ஆகும்’ தொல்,42 எனக் கூறியதன்றி இனமாம் எனக் கூறாமையானும் அது முறையன்று என மறுக்க. 8 விளக்கம்: நிறுத்தமுறை-இரண்டாம் நூற்பாவில் நிறுத்திய முறைமை. இடம் : எழுத்தின் தோற்றத்திற்கு இடமாகிய மார்பு கழுத்து மூக்குத் தலை என்பன. முயற்சி:பல் இதழ் நா மேல்வாய் என்பனவற்றின் தொடர்பால் எழுத்தொலி எழுப்ப நிகழ்த்தும் முயற்சி. எழுத்துப் பிறப்பை உளங்கொண்டே இனமும் அமைத்து ஆசிரியர் முறைப்படுத்தியுள்ளார் ஆதலின், முறை கூறும் அளவிலேயே இனம் அமைத்தலும் பெறப்படும். பிறப்பு: தோன்றுமிடமும் முயற்சியும். செய்கை: அல்வழி வேற்றுமை என்ற இருவகைத் தொடர்க்கண்ணும் புணரும் முறைமை. இவ்வாசிரியர் மயிலைநாதரையும் நச்சினார்க்கினியரையும் ஓரளவு பின்பற்றி இனம் அடைத்தற்கும் முறைவைப்பிற்கும் விளக்கம் தந்துள்ளார். மயிலைநாதர் ஐகாரம் இடத்தானும் முயற்சியானும் ஒத்து இகரத்தொடு கூடி இனம் ஆயிற்று என்றும், ஒளகாரம் இடத்தானும் முயற்சியானும் உகரத்தொடு கூடி இனமாயிற்று என்றும் கூறும் கருத்து இவ்வாசிரியருக்கு உடன்பாடன்று. உயிர் அளபெடைக்கண் இசை நிறைத்தல் |