119 ஒன்றற்காகவே ஆசிரியரால் ஐகாரத்திற்கு இகரமும், ஒளகாரத்திற்கு உகரமும் பயன்படுத்தப்படுவனவே அன்றி, இவற்றிடையே வேறு இயைபு எதுவும் இன்று என்னும் கருத்தினர் இவ்வாசிரியர். ‘வேற்றுமை அல்வழி இஐ என்னும் ஈற்றுப் பெயர்க் கிளவி மூவகை நிலைய அவைதாம் இயல்பா குநவும் வல்லெழுத்து மிகுநவும் உறழா குநவும் என்மனார் புலவா’ தொல்.158 என அல்வழிக்கண்ணும், ‘இகர இறுதிப் பெயர்நிலை முன்னர் வேற்றுமை ஆயின் வல்லெழுத்து மிகுமே’ தொல். 235 ‘ஐகார இறுதிப் பெயர்நிலை முன்னர் வேற்றுமை ஆயின் வல்லெழுத்து மிகுமே’ தொல்.280 என வேற்றுமைக்கண்ணும் இகரமும் ஐகாரமும் ஒரே வகையான செய்கை பெறுவதனை நோக்கியும், ‘ஒளகார இறுதிப் பெயர்நிலை முன்னர் அல்வழி யானும் வேற்றுமைக் கண்ணும் வல்லெழுத்து மிகுதல் வரைநிலை யின்றே அவ்விரு வீற்றும் உகரம் வருதல் செவ்விது என்ப சிறந்திசி னோரே’ தொல்.295 என்ற ஒளகார ஈற்றுப்புணர்ச்சிவிதி அமைந்துள்ளதனை நோக்கியும், ஐ-இ, ஒள-உ என்பன இனம் எனக் கோடல் இழுக்கின்மை அறிக. செய்கையான் ஒத்தல் இனம் அடைத்தற்குச் சிறந்த காரணமாகக் கொள்ளும் இவர் ஐகாரத்திற்கு இகரமும், ஒளகாரத்திற்கு உகரமும் இனம் ஆதற்கண் பொருத்தமின்மை காண்பது வியக்கத் |