120 தக்கது. நச்சினார்க்கினியர் தொல்காப்பிய எழுத்துப் படலத்தின் முதல் நூற்பாவுரையில். ‘குற்றெழுத்துக்களை முன்னாகக் கூறி அவற்றிற்கு இனம் ஒத்த நெட்டெழுத்துக்களை அவற்றின் பின்னாகக் கூறினார்; ஒரு மாத்திரை கூறியே இரண்டு மாத்திரை கூற வேண்டுதலின், அன்றி, இரண்டை முற்கூறினாலோ எனின், ஆகாது; ஒன்றுநின்று அதனொடு பின்னரும் ஒன்று கூடியே இரண்டு ஆவது அன்றி, இரண்டு என்பது ஒன்று இன்று ஆதலின். இதனால் ஒன்றுதான் பல கூடியே எண் விரிந்தது என உணர்க’ என்றும், வீடு பேற்றிற்கு உரிய ஆண்மகனை உணர்த்தும் சிறப்பான னகரம் பின்வைத்தார்’ என்றும். ‘மெய்யின் இயக்கம் அகரமொடு சிவணும்’ தொல்.46 என்ற நூற்பா உரையில், “இறைவன் இயங்குதிணைக் கண்ணும் நிலைத்திணைக்கண்ணும் பிறவற்றின் கண்ணும் அவற்றின் தன்மையாய் நிற்குமாறு எல்லார்க்கும் ஒப்பமுடிந்தாற்போல, அகரமும் உயிர்க் கண்ணும் தனிமெய்க்கண்ணும் கலந்து அவற்றின் தன்மையாயே நிற்கும் என்பது சான்றோர்க்கு எல்லாம் ஒப்பமுடிந்தது. ‘அகர முதல’ என்னும் குறளான் ‘அகரமாகிய முதலை உடைய எழுத்துக்கள் எல்லாம்’ அதுபோல, இறைவனாகிய முதலை உடைத்து உலகம், என வள்ளுவனார் உவமை கூறியவாற்றானும். கண்ணன் ‘எழுத்துக்களில் அகரம் ஆகின்றேன் யானே’ எனக் கூறியவாற்றானும், பிற நூல்களானும் உணர்க’ என்றும். ‘இடையெழுத்து என்ப யரல வழள’ தொல்.21 என்ற நூற்பா உரையில், ‘வல்லினத்துக் க ச த ப என்னும் நான்கும் மெல்லினத்து ஞ ந ம என்னும் மூன்றும் இடையினத்து யவ என்னும் இரண்டும் |