பக்கம் எண் :

122

உஊ-அங்காப்போடு இதழ் குவிதலான் பிறப்பன.

எ- அகரக்கூறும் இகரக் கூறும் உறப் பிறப்பது.

ஏ- அகரக்கூறும் ஈகாரக் கூறும் உறப் பிறப்பது.

ஐ- அகரக்கூறும் இகரக்கூறும் யகரக்கூறும் உறப் பிறப்பது.

ஒ- அகரக்கூறும் உகரக்கூறும் உறப் பிறப்பது.

ஓ- அகரக்கூறும் ஊகாரக்கூறும் உறப் பிறப்பது’

ஒள-அகரக்கூறும் உகரக்கூறும் வகரக்கூறும் உறப் பிறப்பது.

எனவே, உயிரெழுத்துக்கள் அப்பிறப்பு முறையே முறையாக வைக்கப்பட்டன.

க்ங்- முதல் நா முதல்அண்ணம் உறப் பிறப்பன.

ச்ஞ்- இடைநா இடைஅண்ணம் உறப் பிறப்பன.

ட்ண்-நுனிநா நுனிஅண்ணம் உறப் பிறப்பன.

த்ந்-அண்பல் அடி நாவிளிம்பு உறப் பிறப்பன.

ப்ம்-மேலுதட்டினைக் கீழ்உதடு உறப் பிறப்பன.

ய்-அடிநா அடிமேல் வாயைத் தட்டுதலால் பிறப்பது.

ர்ழ்-அண்ணத்தை நாவிளிம்பு தடவுதலால் பிறப்பன.

ல்- அண்பல் அடியை நாவிளிம்பு வீங்கித் தட்டுதலால் பிறப்பது.

வ்- கீழ்உதடு மேற்பல்லைப் பொருந்துவதால் பிறப்பது.

ள்- அண்ணத்தை நாவிளிம்பு வீங்கித் தடவுவதால் பிறப்பது.

ற்ன்-அடிஅண்ணத்தை அடிநா அழுத்தித் தடவுவதால் பிறப்பன.