123 ழ ள ற ன என்பன தமிழ்ச் சிறப்பு எழுத்து ஆதலின் பின் கூறப்பட்டன. வடமொழியில் ளகரமும் உளது எனினும், லகரத்தொடு பொருள் வேறுபாடு இன்மையின் சிறப்பின்றாம். ளகரம் தமிழில் சிறப்பெழுத்தாய் இலங்குமாறு வெல்லம்-வெள்ளம் முதலிய சொற்களில் பெய்து காண்க. இனம் அடைத்தற்குத் தானம் முதலியன பயன்படுமாறு: தோற்றத்தால் க ச ட த ப ற ஆறும் வல்லினமும், ஙஞணநமன ஆறும் மெல்லினமும் ஆயின. இவ்வாறே தோற்றத்தின் ஒரு கூறாகிய முயற்சியால் அஆ முதலிய முதலெழுத்து இவ்விரண்டு ஓர் இனம் ஆயின. அளவால் குறிலும் நெடிலும் தனித்தனி ஓர் இனம் ஆயின. பொருளால் சுட்டு மூன்றும் ஓர் இனமும், வினா நான்கும் ஓர்இனமும் ஆயின. தோன்றும் இடத்தாலும் வடிவாலும் இடையெழுத்து ஆறும் ஓர் இனம் ஆயின. வடிவு- அகரத்தொடு சிவணியே ஒலிக்கும் ஒலிவடிவு. ஒத்த நூற்பாக்கள் : ‘தானம் முயற்சி அளவு பொருள் வடிவு ஆனஒன்று ஆதிஓர் புடை ஒப்பு இனமே,’ நன்.72 ‘சிறப்பினும் இனந்தினும் செறிந்துஈண்டு அம்முதல் நடத்தல் தானே முறையா கும்மே.’ நன்.73 ‘உயிர்முதல் முப்பதும் ஒன்றுஒன் றற்கு இனம்.’ மு. வீ. எ. 20 எழுத்துக்களின் பொதுப்பிறப்பு 9)உயிர் உழப்பு உதானனின் நாதம் உச்சி மிடறுஉரம் மூக்குஉற்று இதழ்நா பல்அணத்து அடைந்து பின்னர் அவற்றது வினையான் வெவ்வேறு எழுத்துஒலி யாய்வரல் பிறப்பு. |