பக்கம் எண் :

125

விளக்கம் :

நிறுத்தமுறை-இரண்டாம் நூற்பாவில் நிறுத்திய முறை.

பிறப்பு -எழுத்துக்களின் தோற்றம்.

உயிர்க்கிழவன் - மனித உடலொடு கூடி உணர்தல் தன்மைத்து ஆகிய உயிர்.

உதானன் - உத்தியிலிருந்து எழும் காற்று.

நிலைக்களன் - தலை மிடறு நெஞ்சு மூக்கு என்ற நான்கும்.

முயற்சிக்கு உதவுவன-பல் இதழ் நா அண்ணம் என்ற நான்கும்.

தொல்காப்பியனார் தலை மிடறு நெஞ்சம் என்ற மூன்றும் நிலைக்களன் என்றும், பல் இதழ் நா மூக்கு மேல்வாய் என்ற ஐந்தும் முயற்சிக்கு உதவுவன என்றும் கொள்வர். இந்நூலாசிரியர் நன்னூலை ஒட்டி மூக்கினையும் நிலைக்களன் என்றார்.

உந்தியிலிருந்து எழும் உள்நாதம் - பரை

நெஞ்சின்கண் நிற்பது - பைசந்தி

மிடற்றின்கண் நிற்பது - மத்திமை

வெளித்தோன்றும் நாதம் - வைகரி

முக்குதல், சீழ்க்கை அடித்தல் போல்வன எழுத்து அல்லாத ஓசை ஆதலான், இவற்றின் பிறப்புப் பற்றிய செய்தி கூறப்படவில்லை

எல்லா எழுத்தும்....... நுவன்றிகினே. தொல்.102

ஆசிரியன் எல்லா எழுத்துக்களும் பிறக்குமாறு முந்து நூற்கண்ணே கூறி வெளிப்படுக்கையினாலே. யானும் அவ்வாறே கூறிய எண்வகை நிலத்தும்