126 பிறக்கின்ற பிறப்போடே அவ்வெழுத்துக்களைக் கூறும் இடத்து, யான் கூறியவாறு அன்றி உந்தியில் தோன்றும் காற்றினதுதிரிதரும் கூற்றின் கண்ணே மாத்திரை கூறி கோடலும், மூலாதாரத்தில் எழுகின்ற காற்றின் ஓசையைக் குற்றம் அற நாடிக்கோடலும் பார்ப்பாரது வேதத்து உளதே, அந்நிலையை ஆண்டு உணர்க; அங்ஙனம் கோடலை ஈண்டுக் கூறல் ஆகாமையின் இந் நூற்கண் கூறாதே, உந்தியில் தோன்றிப் புறத்தே புலப்பட்டு ஒலிக்கும் பொருள் தெரியும் காற்றினது துணிவிற்கே யான் மாத்திரை கூறினேன்; அவற்றினது மாத்திரையை உணர்க என்றவாறு. இலக்கண விளக்கச் சூறாவளி ‘படைகுடி கூழமைச்சு நட்பரண்’ என்புழிப்போலச் செய்யுள் இன்பம்படத் ‘தலையினும் மிடற்றினும் நெஞ்சினும் நிலைஇ’ எனச் சூத்திரம் செய்த ஆசிரியர் கருத்தை நோக்காது அதுவே முறையாகக் கொண்டார். சைவாகமங்களில், உந்தியின் நின்றும் எழுந்த நாதம் நெஞ்சின்கண் பைசந்தியாய்க் கண்டத்தின்கண் மத்திமையாய் நின்று பின்னர் வைகரியில் வெளிப்படும் என்ற துணை அல்லது இவர் கூறிய முறையால் பிறக்கும் என்னாமையானும். பிறவாற்றானும் அது முறையன்மை அறிக. அமைதி- வல்லினம் தலைவளியால் பிறக்கும் என்ற கருத்துடைய இவ்வாசிரியர் தலைமை முற்படக் கூறினார். ‘படைசூடி கூழமைச்சு நட்பரண் ஆறும் உடையான் அரசருள் ஏறு’ என எதுகைத் தொடை நயம் நோக்கி வள்ளுவனார் முறை மாற்றிக் கூறினார். அங்ஙனம் செய்யுள் இன்பம் படக் கூறுதல் தொல்காப்பியனார் கருத்தாயின், |