127 ‘உந்தி முதலா முந்துவளி தோன்றி நெஞ்சினும் தலையினும் மிடற்றினும் நிலைஇ’ தொல்.83 என்று மாற்றிக்கூறியிருப்பார். ‘தலையினும் மிடற்றினும் நெஞ்சினும் நிலைஇ’ என்ற அடி செய்யுள் இன்பத்திற்காகச் சொல்லை மாற்றி அமைத்த அடி அன்று என்பது செவிகருவியாக உணரப்படும். எனவே, தொல்காப்பியனாரை ஒட்டியே இவ்வாசிரியர் இந்நூற்பா யாத்து உரை எழுதியதன்கண் திரிபு இன்மை உணரப்படும். ஒத்த நூற்பாக்கள் : ‘உந்தி முதலா முந்துவளி தோன்றித் தலையினும் மிடற்றினும் நெஞ்சினும் நிலைஇப் பல்லும் இதழும் நாவும் மூக்கும் அண்ணமும் உளப்பட எண்முறை நிலையான் உறுப்புற்று அமைய நெறிப்பட நாடி எல்லா எழுத்தும் சொல்லுங் காலைப் பிறப்பின் ஆக்கம் வேறுவேறு இயல திறப்படத் தெரியும் காட்சி யான.’ தொல்.83 உந்தி முதலெழும் காற்றுப் பிறந்துஉர மூம்சிரமும் பந்தமலி கண்டமும் மூக்குமுற்று அண்ணம் பல்லுடனே முந்து தமிழ்நா மொழிஉறுப் பாகும் முயற்சியினால் வந்து நிகழும் எழுத்தென்று சொல்லுவர் வாணுதலே.’ வீ.6 ‘உந்தியில் தோன்றும் உதான வளிப்பிறந்து கந்தமலி நெஞ்சுதலை கண்டத்து - வந்தபின் நா ஆசில் அண்ணம் இதழ்எயிறு மூக்கெனப் பேசும் எழுத்தின் பிறப்பு. நே.6 |