பக்கம் எண் :

128

‘நிறைஉயிர் முயற்சியின் உள்வளி துரப்ப
எழும்அணுத் திரள்உரம் கண்டம் உச்சி
மூக்குஉற்று இதழ்நாப் பல்அணத் தொழிலின்
வெவ்வேறு எழுத்தொலி யாய்வரல் பிறப்பே.’           நன்.74

‘...........இதழ் மூக்கு அணம்பல்நா
ஐந்துதுணை இடத்தாம் அக்கரப் பிறப்பே.’           தொ.வி. எ. 3

எழுத்துக்களின் பொதுப்பிறப்பிடம்

10)அவ்வழி ஆவி இடைமிடறு உச்சி
வன்மை மென்மைமூக்கு இசையில் தோன்றும்.

இது. முதல் எழுத்துக்கள் இந்நிலைக்களங்களில் நிலைபெறும் ஓசையால் பிறக்கும் என்று அவற்றது பொதுப்பிறவி கூறுகின்றது.

இ-ள்: மேற்கூறிய நிலைக்களன்களுள் பன்னீருயிரும் இடையெழுத்து ஆறும் மிடற்றின்கண்ணும், வல்லெழுத்து ஆறும் மூக்கின்கண்ணும் நிலைபெற்று இசைக்கும் ஓசையால் பிறக்கும் என்றவாறு.

விளக்கம் : தொல்காப்பியனார் உயிரெழுத்துக்களுக்கே பொதுப்பிறப்பிடம் கூறினார். ‘தத்தம் திரிபே சிறிய என்ப’ தொல்.88 என்ற நூற்பாவுரையில் நச்சினார்க்கினியர் வல்லினம் தலைவளி உடையது’ மெல்லினம் மூக்குவளி உடையது. இடையினம் மிடற்று வளி உடையது என்று குறிப்பிட்டதனை இவ்வாசிரியர் மேற்கொண்டார்.

உயிரும் இடையினமும் மிடற்றின்கண் தோன்றுவன என்பதில். இலக்கண ஆசிரியரிடைய கருத்து வேறுபாடு இல்லை. மெல்லினம் மூக்கின் வளியிசையால் தோன்றும் எனத் தொல்காப்பியனாரும் நன்னூலாரும் இவரும்