129 கொள்வர். மெல்லினம் தலைவளியால் பிறக்கும் என்று தொன்னூல் விளக்கமும் முத்து வீரியமும் கூறும். வல்லினம் மார்பில் பிறக்கும் என்று நன்னூலும் தொன்னூல் விளக்கமும் முத்து வீரியமும் கூறும். இவ்வாசிரியர் நச்சினார்க்கினியரை ஒட்டி வல்லினம் தலைவளியால் பிறக்கும் என்றார். இதுவே உரையாசிரியர் கருத்தும் ஆகும். (தொல். 100 உரை) ஒத்த நூற்பாக்கள் : ‘அவ்வழிப் பன்னீர் உயிரும் தம்நிலை திரியா மிடற்றுப் பிறந்த வளியின் இசைக்கும்.’ தொல்.84 ‘மெல்லெழுத்து ஆறும் பிறப்பின் ஆக்கம் சொல்லிய பள்ளி நிலையின ஆயினும் மூக்கின் வளியிசை யாப்புறத் தோன்றும்.’ தொல்.100 ‘அவ்வழி ஆவிஇடைமை இடம் மிடறு ஆகும் மேவும் மென்மை மூக்கு உரம்பெறும் வன்மை.’ நன்.75 ‘உயிர்இடை யினம்மிடறு உரம்வலி உச்சி மெலிஇயை முதலிடம்.’ தொ.வி.3 ‘உயிர்இடை யினம்மிடறு உரம்வலி உச்சி மெலிஇடம் ஆம்என வேண்டப் படுமே.? மு. வீ. எ. 43 உயிர்களின் முயற்சிப் பிறப்பு 11)அவற்றுள் முயற்சியுள் அஆ அங்காந்து இஈ எஏ ஐகான் அதனொடு அண்பல் முதல்நா விளிம்புஉற உஊ ஒஓ ஒளகான் இதழ்குவிந்து இயலும். |