பக்கம் எண் :

130

உயிர்கள் இம்முயற்சிகளால் பிறக்கும் என அவற்றது சிறப்புப் பிறவி கூறுகின்றது.

இ-ள்: மேல் பொதுப்பிறவி கூறிய முதல் எழுத்துக்களுள் அகர ஆகாரங்கள் முன்னர்க் கூறிய நால்வகை முயற்சிகளுள் அங்காந்து கூறும் முயற்சியானும், இகர ஈகார எகர ஏகார ஐகாரங்கள் அங்காந்து கூறும் முயற்சி யொடு அண்பல்லும் அடிநா விளிம்பும் உறக் கூறும் முயற்சியானும், உகர ஊகார ஒகர ஓகார ஒளகாரங்கள் இதழ் குவிந்து கூறும் முயற்சியானும் பிறக்கும் என்றவாறு. அன்னவாதல் கூறிக் காண்க.

அண்பல் வினைத்தொகையாய் நாவிளிம்பு அணுகுதற்குக் காரணமாகிய பல் என்று அதற்கு ஒரு பெயர் ஆயிற்று ‘தந்து புணர்ந்து உரைத்தல்’ என்னும் உத்தியான். ‘அவற்றுள் முயற்சியுள்’ என்பதனை மேலும் வருவிக்க. 11

விளக்கம்: ஒலித்தலுக்காக நாவிளிம்பு முன்வாய்ப் பல்லை அணுகுதலால் முன்வாய்ப்பல் அண்பல் எனப்பட்டது. இப்பற்கள் நாவிளிம்பு அணுகுதற்குக் காரணமாகப் படைக்கப்பட்டன அல்ல எனினும். நாவிளிம்பு அணுகி வெவ்வேறு எழுத்து ஒலி உண்டாக்குவதற்குப் பயன்படுதலால் உள்பொருள் அல்லதனை உள்பொருள் போலக் குறிப்பிடும் ‘தந்துபுணர்ந்து உரைத்தல்’ என்ற உத்தி வகையாக இவ்வாசிரியர் குறிப்பிடுகிறார்.

‘இ ஈ எ ஏ ஐ என இசைக்கும்’ என்ற தொல்காப்பிய 86 ஆம்நூற்பா உரையுள் நச்சினார்க்கினியர், ‘அண்பல் வினைத்தொகை; எனவே, நாவிளிம்பு அணுகுதற்குக் காரணமான பல் என்று அதற்கு ஒரு பெயராயிற்று என்று குறிப்பிட்டுள்ளார். வினைத்தொகை காரணப் பொருளில் வருதல்’ ‘குளன் அணி தாமரை’ என்ற