பக்கம் எண் :

131

கலித்தொகைத் தொடருக்குக் ‘குளன் அழகு பெறுதலுக்குக் காரணமாகிய தாமரை’ என்று அவர் உரை கூறியவாற்றானும் உணர்க.

ஒத்த நூற்பாக்கள் :

‘அவற்றுள்
அ ஆ ஆயிரண்டு அங்காந்து இயலும்.’           தொல்.85

‘இஈ எஏ ஐயென இசைக்கும்
அப்பால் ஐந்தும் அவற்றோ ரன்ன
அவைதாம்
அண்பல் முதல்நா விளிம்புஉறல் உடைய.’           தொல்.86

‘உஊ ஒஓ ஒளஎன இசைக்கும்
அப்பால் ஐந்தும் இதழ்குவிழ்ந்து இயலும்.’           தொல். 87

‘அவற்றுள்
முயற்சியுள் அஆ அங்காப்பு உடைய.’           நன்.76

இஈ எஏ ஐ அங் காப்பொடு
அண்பால் முதல்நா விளிம்புஉற வருமே.’           நன்.77

‘உஊ ஒஓ ஒளஇதழ் குவிவே.’           நன்.78

‘அவற்றுள்
அஆ அங்காப் பொடுவரும் என்ப.’           மூ.வீ.எ.44

‘இஈ எஏ ஐஅங் காப்பொடு
மேல்வாய்ப் பல்லடி நாவிளிம்புற வருமே.’      45

‘உஊ ஒஓ ஒளஇதழ் குவிவே.’