பக்கம் எண் :

133

இயையக்கூறும் முயற்சியான் வகரமும், அண்ணத்தை நாவின் நுனி மேல் நோக்கிச் சென்று தீண்டக் கூறும் முயற்சியான் றகரனகரங்களும் பிறக்கும் என்றவாறு.

உயிர்மெய்யாகக் கூறினும், தனி மெய்யாகச் சேக்கை வேங்கை என மொழிப்படுத்து அன்னவாதல் கூறிக் காண்க. பிறவும் அன்ன.

ஈண்டு, மிடற்று எழு வளிஇசை என்றது அநுவாதம் ‘அடிநா அடிஅணம் உற யதோன்றும்’ என்றார், அதன் இயல்பு உணராமை. மெய் பொய் எனக் கூறிக் காண்க.

விளக்கம்: ‘மெய்யின் இயக்கம் அகரமொடு சிவணும்’ ஆதலின், இந்நூற்பாவில் மெய்யெழுத்துக்கள் அகரத்தொடு சிவணியே எடுத்துக் கூறப்பட்டுள்ளன. அந்நிலையில் அவற்றின் பிறப்பை உள்ளவாறு கூறி அறிதற்கண் எளிமை இராது என்ற எண்ணமுடையார் உணருவதற்காகவும், அரை மாத்திரை ஒலித்தல் அளவுடைய தனிமெய்யைத் தனியே ஒலித்தல் இயலாது என்பது கருதியும் தனிமெய்யின் ஒலியைச் சேக்கை வேங்கை என மொழியிடைப்படுத்து உணருமாறு கூறினார்.

‘மெய்யின் அளவே அரைஎன மொழிப’ தொல்.11 என்ற நூற்பா உரையில் நச்சினார்க்கினியர். ‘தனி மெய்யினது மாத்திரையினை ஒரோவொன்று அரை மாத்திரை உடையது என்று கூறுவர் புலவர் என்றவாறு அவ்வரை மாத்திரையும் தனித்துக்கூறிக் காட்டலாகாது நாச்சிறிதுபுடை பெயருந் தன்மையாய் நின்றலின். இனி அதனைச் சில மொழி மேல் பெய்து, காக்கை கோங்கு கவ்வை எனக் காட்டுப’ என்று குறிப்பிட்டுள்ளதும் நோக்குக.

இடையினம் தோன்றும் இடம் மிடறுஎன்று பத்தாம் நூற்பாவில் கூறியதை மீட்டும் விதந்து, யகரத்தின்