பக்கம் எண் :

134

பிறப்பிடத்தை முயற்சியொடு இணைத்துக் கூறும் இவ்விடத்தில் ‘மிடற்று எழுவளி இசை’ என்றது கூறியது கூறல் ஆயினும், இடையினத்தின் பிறப்பு முயற்சி அதிகாரப்பட்டமையின் அதன்பிறப்பிடத்தையும் ஒருங்கு இணைத்து நினைவுறுத்தல் இயைபு பற்றி அமைதலின், ‘ஈண்டு மிடற்று எழுவளி இசை என்றது அநுவாதம்’ என்றார்.

சிதைவுகள் பத்தனுள் ஏற்றுக் கொள்ளத்தக்க சிதைவுகள் ஐந்து என்றும், அவற்றுள் கூறியது கூறலும் ஒன்று என்றும் பேராசிரியர் தொல்காப்பியப் பொருட்படல 664ஆம் நூற்பா வுரையுள் கூறியதும் நோக்குக.

‘கூறின பின்னும் கூறின சிலஅவை
அநுவாதம் என்றே அறிந்தே அடக்குக’.           இ. கொ.7

உரலாணி-மர உரலைப் பலகாலும் உலக்கை கொண்டு பயன் கோடலான் ஏற்படும் ஆழ்ந்த பள்ளம் நீக்கப்பெற ஏற்ற பெற்றியதாய் வலியச் செருகப்படும் மர ஆப்பு. இங்ஙனமே நச்சினார்க்கினியரும் யகரத்தின் பிறப்பைக் கூறும்போது குறிப்பிட்டுள்ளார்.

அடிநா அடிஅண்ணத்தைத் தொடுவதனால் யகரம் பிறவாது; அழுத்தித் தட்டினால்தான் பிறக்கும் என்பது.

ஒத்த நூற்பாக்கள்:

‘ககாரம் ஙகாரம் முதல்நா அண்ணம்.’           தொல்.89

‘சகாரம் ஞகாரம் இடைநா அண்ணம்.’      90

‘டகாரம் ணகாரம் நுனிநா அண்ணம்.’      91

‘அவ்வாறு எழுத்தும் மூவகைப் பிறப்பின’      92

‘அண்ணம் நண்ணிய பல்முதல் மருங்கின்
நாநுனி பரந்து மெய்யுற ஒற்றத்
தாம்இனிது பிறக்கும் தகாரம் நகாரம்.’      93