பக்கம் எண் :

135

‘அணரி நுனிநா அண்ணம் ஒற்ற
றஃகான் னஃகான் ஆயிரண்டும் பிறக்கும்.’           தொல்.94

‘நுனிநா அணரி அண்ணம் வருட
ரகாரம் ழகாரம் ஆயிரண்டும் பிறக்கும்.’      95

‘நாவிளிம்பு வீங்கி அண்பல் முதல்உற
ஆவயின் அண்ணம் ஒற்றவும் வருடவும்
லகாரம் ளகாரம் ஆயிரண்டும் பிறக்கும்.’
96

‘இதழ்இயைந்து பிறக்கும் பகாரம் மகாரம்.’      97

‘பல்இதழ் இயைய வகாரம் பிறக்கும்.’      98

‘அண்ணம் சேர்ந்த மிடற்றுஎழு வளிஇசை
கண்ணுற்று அடைய யகாரம் பிறக்கும்.’      99

‘கஙவும் சஞவும் டணவும் முதல்இடை
நுனிநா அண்ணம் உறமுறை வருமே.’           நன். 79

‘அண்பல் அடிநா முடிஉறத் தநவரும்,’      80

‘மீகீழ் இதழ்உறப் பம பிறக்கும்.’      81

‘அடிநா அடிஅணம் உற ய தோன்றும்.’      82

‘அண்ணம் நுனிநா வருட ரழவரும்.’      83

‘அண்பல் முதலும் அண்ணமும் முறையின்
நாவிளிம்பு வீங்கி ஒற்றவும் வருடவும்
லகாரம் ளகாரம் ஆயிரண்டும் பிறக்கும்.’      84

‘மேற்பல் இதழ்உற மேவிடும் வவ்வே.’      90

‘அண்ணம் நுனிநா நனிஉறின் றனவரும்.’      91

‘அடிநா அடிஅணம் அழுத்தக் கஙவரும்.’           மு. வீ. எ. 47

‘இடைநா இடைஅணம் இறுக்கச் சஞவரும்.’      48

‘நுனிநா நுனிஅணம் நோக்க டணவரும்.’      49

‘அண்பல் அடிநா முடியுறத் தநவரும்’      50

‘இரண்டுஇதழ் உறப்பம எழும்என மொழிப’      51