பக்கம் எண் :

136

‘அடிநா அடிஅணம் உறவரும் யகாரம்.’      52

‘அண்ணம் நுனிநா வருட ரழவரும்,’           மூ வீ எ. 53

‘லகரம்-அணப்பல் லடிநா விளிம்புஉற வருமே’      54

‘ளகரம்மேல் வாயை நாநுனி தடவப்
பிறக்கும் என்மனார் பெரிதுஉணர்ந் தோரே.’      55

‘மேற்பல் இதழ்உற மேவிடும் வவ்வே’.      56

‘அண்ணம் நுனிநா அழுத்த றனவரும்.’      57

‘முதல்இடை நுனிநாப் பல்இதழ் மூக்கின்
வன்மை முதலா மும்மையும் பிறக்கும்,’-          அவிநயம்

சார்பு எழுத்தின் முயற்சிப் பிறப்பு

13, ஆய்தம்நெஞ்சு ஓசையின் அங்காந்து இயலும்
சார்புஎழுத்து எனவும் தம்முதல் அனைய.

இது சார்பு எழுத்துக்கள் இந்நிலைக் களன்களில் நிலைபெறும் ஓசையானும், இம் முயற்சியானும் பிறக்கும் என அவற்றின் பொதுவும் சிறப்பும் ஆகிய இரு கூற்றுப் பிறவியும் கூறுகின்றது.

இ-ள்: ஆய்த எழுத்து நெஞ்சின் கண் நிலைபெற்று ஒலிக்கும் ஓசையானும், அங்காந்துகூறும் முயற்சியானும் பிறக்கும். சார்ந்து வருவன ஆகிய ஒழிந்த எழுத்துக்களின் பிறவியும் தத்தம் முதல் எழுத்துக்களின் பிறவியை ஒக்கும் என்றவாறு. அன்னவாறு கூறிக் காண்க. 13

விளக்கம்: நச்சினார்க்கினியர் ‘சார்ந்துவரின் அல்லது’ தொல் 101 என்ற நூற்பா வுரையில் ‘ஏனை ஒத்த காட்சியின் இயலும் என்ற தொடருக்கு, ‘ஒழிந்த ஆய்தம் தனக்குப் பொருந்தின நெஞ்சுவளியான் பிறக்கும்’ என்று குறிப்பிட்டதை உட்கொண்டு, இவ்வாசிரியர்’ ஆய்தத்தின் பிறப்பிடன் நெஞ்சு’ என்றும், நன்னூலார்’ அங்கா முயற்சி’-நன்.87என்று கூறியதை