பக்கம் எண் :

137

உட்கொண்டு, ‘முயற்சி அங்காத்தல்’ என்றும் குறிப்பிட்டுள்ளார். நன்னூலார் ஆய்தம் தலைவளியால் பிறக்கும் என்பர். முத்து வீரிய நூலார் ஆய்தம் உந்தியிலேயே தோன்றும் என்பர்.

ஒத்த நூற்பாக்கள் :

‘சார்ந்துவரின் அல்லது தமக்குஇயல்பு இலஎனத்
தேர்ந்து வெளிப்படுத்த ஏனை மூன்றும
தத்தம் சார்பின் பிறப்பொடு சிவணி
ஒத்த காட்சியின் தம்இயல்பு இயலும்.           தொல்.101

‘ஆய்தக்கு இடம்தலை அங்கா முயற்சி
சார்புஎழுத்து எனவும் தம்முதல் அனைய’           நன்.87

‘உந்திதனி நிலைஉற்று அங்காந்து இயலும்.’           மு. வீ. எ. 58

பிறப்பிற்குப் புறனடை

14.தத்தம் திரிபே சிறிய என்ப.

இ-ள். ஒவ்வொரு தானத்துள் பிறக்கின்ற எழுத்துக்களைக் கூட்டிக் கூறினோம் ஆயினும் நுண்ணுணர்வான் ஆராயும் இடத்துத் தம்முடைய வேறுபாடுகள் சிறிய சிறியவாக உடைய என்று கூறுவர் புலவர், அவ்வேறுபாடுகள் அறிந்து கொள்க என்றவாறு.

அவை எடுத்தல் படுத்தல் நலிதல் விலங்கல் என்றவாற்றானும் தலைஇசை மிடற்றுஇசை, நெஞ்சுஇசை, மூக்குஇசை என்றவாற்றானும் பிறவாற்றானும் வேறுபடுதல். ஐ விலங்கல் உடையது.

விளக்கம்: இது தொல்காப்பியத்தின் 88 ஆம் நூற்பா இஃது அந்நூலில் உயிர்களின் முயற்சிப் பிறப்பினை அடுத்து மெய்களின் முயற்சிப் பிறப்பிற்கு