138 முன் வைக்கப்பட்டிருத்தலின் இதனைச் சிங்கநோக்காக உயிர்கள் மெய்கள் என்ற இவ்விரு வகை முதலெழுத்துக்களின் பிறப்பிற்கும் புறனடையாகக் கொள்ளுமாறு பாயிரம் கூறிப் பின் உரை வரைந்த நச்சினார்க்கினியர் உரையே ஈண்டு இவ்வாசிரியரால் குறிக்கப்பட்டுள்ளது. நச்சினார்க்கினியர் தலைவளி நெஞ்சுவளி மிடற்றுவளி மூக்குவளி என்று குறிப்பிட்டவற்றை இவர் தலைஇசை, நெஞ்சுஇசை, மிடற்றுஇசை, மூக்குஇசை என்று குறிப்பிட்டுள்ளார். நச்சினார்க்கினியர் ‘வல்லினம் தலைவளி உடையது; மெல்லினம் மூக்குவளி உடையது; இடையினம் மிடற்றுவளி உடையது; ஏனையவும் கூறிக் கண்டு உணர்க’ எனவும் இந்நூற்பா உரையுள் குறிப்பிட்டுள்ளார். அஆ, இஈஎஏஐ, உஊஒஓஒள, கங, சஞ, டண, தந, பம, ரழ, றன-என்பன ஒவ்வொரு தானத்துள் பிறப்பனவற்றையெல்லாம் சேர்த்து வைத்துக்கொண்டு முயற்சிப் பிறப்புக் கூறுதலே கூட்டிக் கூறுதலாம். எடுத்தல்-உயர்த்தி ஒலித்தல். படுத்தல்-தாழ்த்தி ஒலித்தல். நலிதல்-இடை நிகர்த்த ஒலியான் ஒலித்தல். விலங்கல்-ஒலிக்குங்கால் ஒலி அலை குறுக்கே செல்வது. கலிப்பாவுள். தரவினை எடுத்தும், தாழிசையைப் படுத்தும் சரிதகத்தை நலிந்தும் ஒலித்தல் வேண்டும். இவ்வோசைகளை வடநூலார் உதாத்தம், அநுதாத்தம், சுவரிதம் என்பர். சுவரித ஓசை உடையதாகிய கலிப்பா உறுப்பே சுரிதகம் ஆயிற்று என்பது பிரயோக விவேகநூலார் கருத்து. ‘நலிதலை ஈற்றும் ஈற்றயலுமாக உடைய செய்யுள் உறுப்பைச் சுரிதகம் என்பர். உருவகம் தீவகம் என்பது போலச் சுவரிதகம் என்பது சுரிதகம் என |