பக்கம் எண் :

139

நின்றது தமிழ்நூல் உரைகாரர் சுரிந்து இறுதலின் சுரிதகம் என்பது அறியாமை.’ பிர. விவே.40 உரை

ஒத்த நூற்பாக்கள் :

முழுதும்-           தொல்.88

‘எடுத்தல் படுத்தல் நலிதல்
ஓயாது உரப்பல் எனநால் வகையில் பிறக்கும் மெய்கள்.’           வீ.4

‘எடுத்தல் படுத்தல் நலிதல் உழப்பின்
திரிபும் தத்தமில் சிறிதுஉள ஆகும்’           நன்.88

‘எடுத்தல் படுத்தல் இரண்டே’ ஓசை.’           மு. வீ. எ. 59

‘எடுத்தல் படுத்தல் இரண்டே ஓசை
நலிதல் விலங்கலொடு நான்கென் பார்சிலர்
மூன்றெனத் துணிந்தே மொழிகுவர் பலரே.’           இ. கொ. 127

குற்றிய லிகரம்

15யகரம் வரக்குறள் உத்தப வரூஉம்
இகரமும் மியாவின் இகரமும் குறிய.

இது மேல் பிறவி கூறப்பட்ட சார்பு எழுத்துக்களுக்குச் சார்ந்து வரும் இயல்பும் ஒருபிறவி ஆதலின், அப்பிறவி கூறுகின்றவற்றுள் இஃது இடனும் பற்றுக்கோடும் சார்ந்து குற்றியலிகரம் ஆமாறு கூறுகின்றது.

இ-ள். யகர முதல்மொழி வருமொழியாய் வந்து புணர, நிலைமொழிக் குற்றுகர எழுத்துக்கெட ஆண்டு வரும் இகரமும் முன்னிலை அசைச் சொல்லாய் வரும் மியா என்னும் இடைச்சொல்லின் மகரத்தை ஊர்ந்து நின்ற இகரமும் குற்றியலிகரமாம் என்றவாறு.

எனவே புணர்மொழி அகத்தும் ஒருமொழி அகத்தும் வரும் என்பதாயிற்று.