பக்கம் எண் :

142

‘யகரம் வருவழி இகரம் குறுகும்
உகரக் கிளவி துவரத் தோன்றாது,’           தொல்.410

‘இகரம் குறுகி வரும்குற் றுகரம்பின் யவ்வரினே.’           வீ.3

‘யப்பின்பு அடைய வரும்இகரம்..... .....’           நே. 4

‘யகரம் வரக்குறள் உத்தரி இகரமும்
அசைச்சொல் மியாவின் இகரமும் குறிய,’           நன்.93

‘யம்முதல் இய்யாம் இருகுறள் உக்கெடில்
அஃகும் அற்றாம் அசைச்சொல் மியாவே’           தொ. வீ. 14

‘யகரம் வரும்வழி இகரம் குறுகும்,’           மு. வீ. எ. 34, புணரியல் 231

‘அசைச்சொல் மியாவின் இகரமும் அற்றே.’           மு. வீ. எ. 35

குற்றிய லுகரம்

16. நெடிலோடு ஆய்தம் உயிர்வலி மெலிஇடை
தொடர்மொழி இறுதி வன்மைஊர் உகரம்
அஃகும் என்மனார் ஆயுங் காலே.

இஃது இடனும் பற்றுக்கோடும் சார்ந்து குற்றியலுகரம் ஆமாறு கூறுகின்றது.

இ-ள்; நெட்டெழுத்தின் பின்னும், ஆய்தமும் உயிரும் வல்லெழுத்தும் மெல்லெழுத்தும் இடை எழுத்தும் என்ற இவை தொடர்ந்த மொழி ஈற்றின் கண்ணும் நின்ற வல்லெழுத்துக்களை ஊர்ந்து நின்ற உகரம் தன் அளவில் சுருங்கும் என்று கூறுவர் ஆசிரியர் ஆராயும் இடத்து என்றவாறு. வேற்றுமை நயம் பற்றி உயிர்த் தொடர்மொழி என்றார். தொடர்மொழி இறுதி வன்மை’ என நிலத்தது அகலம் போல ஒன்றியல் கிழமைப்பட்டு நின்றது. அம்மொழியின் தீர்ந்து அவை