பக்கம் எண் :

143

நில்லாமையின். வன்மை எனப் பொதுப்படக் கூறுதலானே, ஆறனையும் தொடர வேண்டும் என்னும் யாப்புறவுஇன்றி ஏற்றபெற்றி தொடரும் எனக்கொள்க, இடை ஒற்றுஆறும் வல்லொற்றுள் சிலவற்றோடு அன்றி ஆறோடும் மயங்காமையின்.

(எ-டு.) நாகு எஃகு வரகு கொக்கு குரங்கு தெள்கு எனவரும். பிறவும் அன்ன. இவ்வறுவகை மொழியும் இடம். ஈற்று வல்லெழுத்துப் பற்றுக்கோடு.

‘ஆயுங்காலே’ என்ற இலேசான், ‘ஈரொற்றுத் தொடர்மொழி இடைத்தொடர் ஆகா’ எனவும், ஈர்க்கு மொய்ம்பு என வன்தொடரும் மென்தொடரும் ஆம் எனவும். ‘நுந்தை’ என்னும் முறைப்பெயர் மருங்கின்-ஒற்றிய நகரம் மிசை. நகரம் ஊர்ந்து நின்ற உகரம் குற்றியலுகரமாம் எனவும். வல்லொற்றுத் தொடர் மொழிக் குற்றுகரம் வல்லெழுத்து வருவழிச் செக்குக்கணை சுக்குக்கொடு எனத் தன் அரை மாத்திரையினும் குறுகும் எனவும் கொள்க. இஃது அங்ஙனம் குறுகியவாறு குரங்கு கடிது முதலியவற்றோடு படுத்துச் செவி கருவியாக உணர்க. இதற்கு வல்லொற்றுத் தொடர் மொழியும் வல்லெழுத்து வரும் வழியும் இடம், ஈற்று வல்லெழுத்துப் பற்றுக்கோடு, நுந்தை என்ற சொல்லில் உகரத்திற்கு முறைப்பெயர் இடம். நகரம் பற்றுக்கோடு.

‘நெடிலே குறில்இணை குறில்நெடில் என்றுஇவை
ஒற்றொடு வருதலொடு குற்றுஒற்று இறுதி என்று
ஏழ்குற் றுகரக்கு இடன்என மொழிப’

என ஏழ் இடம் கொள்வாருக்குப் பிண்ணாக்கு, சுண்ணாம்பு முதலியனவும். ஆய்தம் தொடர்ந்தனவும் அடங்காமையும் அவ்வேழும் இவ்வாறனுள் அடங்குமாறும் அறிக.