240 ‘ஐயம் தீரப் பொருளை உணர்த்தலும் மெய்ந்நடு நிலையும் மிகம்நிறை கோற்கே’ நன். 29 எனவும், ‘கையி னாற்சொலக் கண்ணினில் கேட்டிடும் மெய்கொள் சிந்தையின் மூங்கையும் ஆயினேம்’ சிந், 997 எனவும், ‘கையறு நெஞ்சம் கடியல் வேண்டும் பொய்தீர் காட்சிப் புரையோய் போற்றி’ சிந். 13-91, 92 எனவும், ‘கௌவையும் கடும்புனல் ஒலியும் காப்பவர் செவ்வன்நூ றாயிரம் சிலைக்கும் பம்மையும் எவ்வெலாத் திசைதொறும் ஈண்டிக் காரொடும் பௌவம்நின் றியம்புவது ஒத்த என்பவே’ சிந். 42 எனவும், ‘வெவ்வினை வெகுண்டு சாரா விழுநிதி அமுத மன்னீர் கௌவிய எஃகின் நின்ற கயக்கமில் நிலைமை நோக்கி ஒளவியம் அகன்று பொங்கும் அழல்படு வெகுளி நீக்கி இவ்வியல் ஒருவற்கு உற்றது இற்றென இயம்புகின்றான்,’ சிந். 394 எனவும், ‘ஒளவிய நெஞ்சத்தான் ஆக்கமும் செவ்வியான் கேடும் நினைக்கப் படும்.’ குறள். 169 எனவும் வருவனவற்றுள் ஐகார ஒளகாரங்களை ஈரெழுத்தாகக் கொள்ளாக்கால் செய்யுளியலோடு கொண்ட எதுகையோடு மாறுபட வரும் என்க. ‘ஆயிரு தொடை |