பக்கம் எண் :

241

யும் ‘தொல்.செய்,64 என்னும் செய்யுளியல் சூத்திரத்துள் உரைகாரர் ஐகார ஒளகாரம் போலி வகையால் கிளை எழுத்து எனப்படும் என்றார். இனி, நச்சினார்க்கினியர் எழுத்ததிகாரத்துள் போலி எழுத்துக் கொள்ளற்க என்பர் கொள்ளா எழுத்திற்கு இலக்கணம் கூறின் அந்நூற்கு நின்று பயன் இன்மை என்னும் குற்றம் வரும் என்க. நன்னூலாரும் போலியைத்தள்ளாது எழுத்து இலக்கணம் ‘பன்னிரு பாற்று அதுவே’ நன். 57 என்றலின், போலி எதுகை நிமித்தம் அங்கீகாரம் ஆயிற்று. இளம்பூரணரும் போலி எழுத்தைக் கொள்ளற்க என்று கூறாமை அவர் உரையில் காண்க. (அது கொள்ளற்க என இப்பொழுது உரையாசிரியர் உரையுள் காணப்படும் தொடர் நச்சினார்க்கினியத்தைக் கண்டு சேர்க்கப்பட்டது போலும்.) தொல்காப்பியர் இயற்கை ஆயிரம் என ஓர் எண்ணுக் கொண்டதன்றித் தொள்ளாயிரம் எனச் சந்தி நோக்கி நூறு திரிந்த ஆயிரமும் கொண்டாற்போலவும், தாமரை என்பது செம்மொழியும் பிரிமொழியும் ஆயினாற் போலவும் இயற்கையாகிய ஓர் எழுத்து ஐகார ஒளகாரங்கள் கொண்டதன்றி எதுகை நோக்கி ஈரெழுத்து இயைந்த ஐகார ஒளகாரங்களும் கொண்டார் என்க. உயிர் மெய்களை ஒற்றுமை நயம் கருதி ஓர் எழுத்தாகவும் வேற்றுமை நயம் கருதி ஈரெழுத்தாகவும் கொண்டாற் போல ஐகார ஒளகாரங்களையும் அவ்வாறு கொண்டார் என்பதும் ஒன்று. போல எழுத்து என்பார், இலக்கணப் போலி ஒப்பில்போலி போல எழுத்துப்போலியும் கைக்கொண்டு எதுகை கொள்வார் என்க. மியா நுந்தை என்பன ஒரு செய்யுட்கும் பயன்படாது இக்காலத்து நின்றாற்போல, அஇ அஉ என்பன இக்காலத்துப் பயன்படாமலே நின்றன எனினும் அமையும்.” பிரயோக விவேகம்-ஐந்தாம் நூற்பா உரை.

இவ்வுரையால் பிரயோக விவேக நூலார் இந்நூற்பாக்களைச் சந்தியக்கரங்களாகக் கோடலோடு