பக்கம் எண் :

243

இவற்றால், நச்சினார்க்கினியரைப் பின்பற்றிப் போலி எழுத்தைக் கொள்ளற்க என்று இவ்வாசிரியர் கூறியிருத்தல் அமைவு உடைத்தன்று.

சூறாவளி

போலி எழுத்து என வேறு இல்லை என்பது விருத்தியுள் காண்க.

அமைதி

இங்ஙனம் கொண்டு இந்நூற்பாக்களை ஐகார ஒளகாரங்களாகிய எழுத்தின் பிறப்புப்பற்றி அமைந்தனவாகக் கூறுதல் பொருந்தாமை முன்னர் விளக்கப்பட்டது

ஒத்த நூற்பாக்கள் :

‘அகர இகரம் ஐகாரம் ஆகும்.’           தொல். 54

‘அகர உகரம் ஒளகாரம் ஆகும்.’      55

‘அகரத் திம்பர் யகரப் புள்ளியும்
ஐஎன் நெடுஞ்சினை மெய்பெறத் தோன்றும்.’      56

‘இகர யகரம் இறுதி விரவும்.’      58

‘அகரம் வகரத்தி னோடியைந்து ஒளவாம் யகரத்தினோடு      அகரம் இயைந்துஐய தாகும் .... ...’           வீ. 3

‘ஆதிஉயிர் வவ்வியையின் ஒளவாகும் அஃதன்றி      நீதியினால் யவ்வியையின் ஐயாகும்......’           நே. 9

‘அம்முன் இகரம் யகரம் என்றிவை      எய்தின் ஐஒத்து இசைக்கும் அவ்வோடு      உவ்வும் வவ்வும் ஒளவோ ரன்ன,’           நன். 125

‘அகரமும் இகரமும் ஐகாரம் ஆகும்.’           மு.வீ.எ. 107

‘அகரமும் உகரமும் ஒளகார மாகும்.’      108

‘இகரமும் யகரமும் இறுதி விரவும்.’      106