பக்கம் எண் :

244

‘ஆய்தமும் யவ்வும் அவ்வொடு வரினே
ஐஎன் எழுத்தொடு மெய்பெறத் தோன்றும்.’ அவிநயம்.

எழுத்துச்சாரியை

37. நெட்டுயிர் காரமும் ஐஒள கானும்
இருமைக் குறில்ஒற்று இவற்றொடு கரமும்ஆம்
இன்னசா ரியைபெறும் எவ்வழி யானும்
மெய்யின் இயக்கம் அகரமொடு சிவணும்.

இது மேல் இலக்கணம் கூறப்பட்ட அவ்வெழுத்துக்கள் வழங்குவதற்கு வரும் சாரியை கூறுகிறது.

இ-ள்: நெட்டெழுத்து ஏழும் காரமும், ஐகார ஒளகாரங்கள் அது அன்றிக் கானும், உயிர்க்குறிலும் உயிர்மெய்க்குறிலும் மெய்களும் காரம் கான்களுடனே கரமும் ஆகின்ற இத்தன்மையை உடைய சாரியை பெற்று நடக்கும். சாரியை பெற்ற இடத்தும் பெறாத இடத்தும் ஒற்றுக்களது இயக்கம் அகரத்தொடு பொருந்தி இயங்கும் என்றவாறு.

அன் ஆன் முதலிய மொழிச்சாரியையும் உடைமையின், இவை எழுத்துச்சாரியை என்பார் ‘இன்னசாரியை’ என்றார்.

வரலாறு: ஆகாரம் ஈகாரம் எனவும், ஐகான் ஒளகான் எனவும், அகாரம் இகாரம் எனவும், அஃகான் இஃகான் எனவும், அகரம் இகரம் எனவும், ககாரம் சகாரம் எனவும். கஃகான் மஃகான் எனவும், ககரம் சகரம் எனவும் வரும். பிறவும் அன்ன,

‘வகாரம் மிசையும் மகாரம் குறுகும்’           தொல். 330

எனவும்,

‘மகரத் தொடர்மொழி மயங்குதல் வரைந்த.’          தொல். 82

எனவும்,