பக்கம் எண் :

245

வஃகான் மெய்கெடச் சுட்டுமுதல் ஐம்முன்’ தொல்.122

எனவும்.

சாரியை பெற்ற இடத்தும்,

‘அம்மின் இறுதி கசதக் காலைத்
தன்மெய் திரிந்து ஙஞந ஆகும்.’           தொல். 129

எனச் சாரியை பெறாத இடத்தும் மெய்யின் இயக்கம் அகரமொடு சிவணியவாறு காண்க.

இன்னும் உரையில் கோடலான், ஆன் ஏன் ஓன் முதலிய சாரியை பெறுதலும், ஐகார ஒளகாரங்கள் ஒரிந்தவற்றின்கண் கான் வருங்காலை ஆய்தம் வருதலும், சாரியை பெற வேண்டும் என்னும் யாப்புறவு இன்றி,

‘ஆஏ ஓஅம் மூன்றும் வினாஅ’           தொல். 32

‘அஇ உஅம் மூன்றும் சுட்டு’           தொல். 31

என்றார்போல வாளா கூறுதலும் கொள்க. 37

முதலாவது-எழுத்தியல் முற்றிற்று.

விளக்கம் : ஐகார ஒளகாரங்கள் ஒழிந்தவற்றின் கண் கான் வருங்கால் அஃகான், மஃகான் என இடையே ஆய்தம் வரும்.

ஆன் ஏன் ஓன் என்ற எழுத்துச்சாரியைகள் பொருந்தி வந்தமைக்கு எடுத்துக்காட்டு இன்று.

இலக்கண விளக்கச் சூறாவளி

ஒற்றுக்கள் சாரியை பெறா என்பது விருத்தியுள் காண்க.

அமைதி

மெய்கள் அகரச்சாரியை பெறும் என்று கொள்வாருக்கு, காரம் கரம் கான் என்பன ஒற்றின்மீது ஏறிய