பக்கம் எண் :

246

அகரத்தின் சாரியைகள் என்பது பொருந்தும், இவ்வாசிரியர் தொல்காப்பியனாரை ஒட்டி ‘மெய்யின் இயக்கம் அகரமொடு சிவணும்’ தொல்.46 என்றார் ஆகலின், யாண்டும் மெய்தனித்துக் கூறப்பெறாது அகரத்தொடு சிவணியே கூறப்பெறுதலின் ஒற்றுமை நயம் பற்றி அகரமூர்ந்த மெய்யை மெய்யாகவே கொண்டு இச்சாரியைகள் பெறும் என்று கூறற்கண் தவறு இன்மை காண்க.

எழுத்துச்சாரியை என்பதனை எழுத்துக்கள் பெற்றும் பெறாதும் வரலாம். ஆனால் மெய்கள் அகரத்தொடு சிவணாது தனித்துக் கூறப்படும் மரபு இன்மையின், அகரத்தைச் சாரியை என்று விதக்காது ‘மெய்யின் இயக்கம் அகரமொடு சிவணும்’ தொல். 46 என ஒற்றுமைப்படுத்திக் கூறியதே ஏற்றது.

ஒத்த நூற்பாக்கள் :

‘காரமும் கரமும் கானொடு சிவணி
நேரத் தோன்றும் எழுத்தின் சாரியை’           தொல். 135

‘அவற்றுள்
கரமும் கானும் நெட்டெழுத்து இலவே.’      136

‘வரன்முறை மூன்றும் குற்றெழுத்து உடைய.’      137

‘ஐகார ஒளகாரம் கானொடும் தோன்றும்.’      138

‘மெய்யின் இயக்கம் அகரமொடு சிவணும்.’      46           மு. வீ. எ. 95

‘மெய்கள் அகரமும் நெட்டுயிர் காரமும்
ஐஒள கானும் இருமைக் குறில்இவ்
இரண்டொடு கரமுமாம் சாரியை பெறும்பிற.’           நன். 126

‘நெட்டெழுத்து எல்லாம் காரமொடு நிலையும்.’           மு. வீ. எ. 100

‘அவற்றுள், ஐஒள கானும் அடையவும் பெறுமே’      119