247 ‘காரம் கான் கரம் பெறும்இரு மைக்குறில்.’ 111 ‘கரமும் கானும் காரமும் அகரமும் ஏனமும் பிறவும் எழுத்தின் சாரியை’-பிங்கலம். ‘கரமொடு கானே காரம் காட்டிய அகரம் என்ப தரமுற எழுத்திற்கு ஏற்ற சாரியை நான்கே சாற்றும்.? சூடாமணி நிகண்டு. [உரையாசிரியர் ‘கிளந்த அல்ல’ (தொல். சொல். 298) என்ற நுற்பா உரையுள் காரம். கரம், கான், ஆனம், ஏனம், ஓனம் எனபன வேறுபிற தோன்றும் இடைச் சொல்லாகக் குறிப்பிட்டார். ஆனம் ஏனம் ஓனம் என்பன எழுத்துச்சாரியை என்பதைச் சேனாவரையரும் நச்சினார்க்கினியரும் குறிப்பிட்டுள்ளனர்.] இரண்டாவது-பதவியல் மொழியாக்கமும் மொழி வகைகளும் 38. எழுத்தே தனித்தும் இணைந்தும் தொடர்ந்தும் பதமாம் பொருள்தரின் அதுபகாப் பதம்பகு பதமென ஆயிரு பகுதித்து என்ப. என்பது சூத்திரம். நிறுத்தமுறையானே பதங்களது இயல்புஉணர்த்திற்று ஆதலின். இவ்வோத்துப் பதவியல் என்னும் பெயர்த்து. மேல்எழுத்து உணர்த்தி அவ்வெழுத்தினான் ஆகும் பதங்களது இயல்பு உணர்த்திற்று ஆகலான், மேல் ஒத்தினோடு இயைபு உடைத்து ஆயிற்று. இதனுள் இத்தலைச் சூத்திரம் மொழி ஆக்கமும் அதன் பகுதியும் உணர்த்துகின்றது. இ-ள்: மேற்கூறிய இலக்கணங்களை எய்திநின்ற எழுத்துக்கள் தாமே தனித்து ஓரெழுத்து ஆகியும். இணைந்து ஈரெழுத்து ஆகியும், இரண்டனை இறந்து தொடர்ந்து பல எழுத்தாகியும் நின்று பொருளை |