248 விளக்கும் எனின் அவ்வெழுத்துக்கள் மொழி எனப்படும். அங்ஙனம் எழுத்தான் ஆகிய மொழிதான் பகாப்பதமும் பகுபதமும் என அவ்விரண்டு கூற்றதாம் என்று கூறுவர் ஆசிரியர் என்றவாறு. மேற்கூறிய இலக்கணங்களை எய்தி நின்ற எழுத்தே மொழியாம் என்றலின். ‘மொழிப்படுத்து இசைப்பினும் தெரிந்து வேறு இசைப்பினும்-எழுத்து இயல் திரியா’ தொல். 53 என்பதூஉம் பெற்றாம். பெறவே, அஃகல்-அ எனவும். ஆல்-ஆ எனவும், கடல்-க எனவும், கால்-கா எனவும் மொழிக்கண்படுத்துச் சொல்லினும், தெரிந்துகொண்டு வேறே சொல்லினும், உயிரும் மெய்யும் ஆகிய எழுத்துக்கள் பெருக்கச் சுருக்கம் உடையன போன்று இசைப்பினும். தத்தம் மாத்திரை இயல்பில் திரியாவாகி வரும் எனக்கொள்க. இன்னும் எடுத்தல் படுத்தல் முதலிய ஓசை வேற்றுமைக்கண்ணும் எழுத்தியல் திரியா என்பதூஉம் கொள்க. ஈரெழுத்து ஒருமொழியும் உடன் ஓதினார். சிலபல என்னும் தமிழ் வழக்கு நோக்கி. ‘ஓரெழுத்து ஒருமொழி ஈரெழுத்து ஒருமொழி இரண்டுஇறந்து இசைக்கும் தொடர்மொழி உளப்பட மூன்றே மொழிநிலை தோன்றிய நெறியே.’ தொல். 45 என்றார் ஆசிரியர் தொல்காப்பியனாரும் என்க. ‘பொருள்தரின் பதம் ஆம்’ எனவே, தாராதவழி எழுத்தாம் தன்மையும், தந்தவழி மொழியாம் தன்மையும் எய்தி நிற்றல் பெற்றாம். ‘தன்னை உணர்த்தின் எழுத்தாம் பிறபொருளைச் சுட்டுதல் கண்ணேயாம் சொல்.’ என்ப ஆகலின், |