பக்கம் எண் :

297

விளக்கம்: சங்க காலத்தில் செய்யும் என்னும் முற்றே நிகழ்காலம் காட்டியது, ஆநின்று கின்று என்பன பிற்பட்டன. கிறு என்பது இரண்டற்கும் பிற்பட்டது என்பர் நச்சினார்க்கினியர்; தொல். சொல். 204, எதிர்மறை வினைகள் நச்சினார்க்கினியர் கருத்தை உட்கொண்டு சொற்றனவாம்.

கிட, இரு என்பன நிகழ்காலம் காட்டும் என்பதனை நச்சினார்க்கினியர், சொல்.204ஆம் நூற்பா உரையிலும் ‘உரைக்கிற்றி’ நன்றுமன் என்இது நாடாய்கூறி’ என றகரம் நிகழ்வுபற்றி வருதலை 225ஆம் நூற்பா உரையிலும். ‘கானம் கடத்திர் எனக்கேட்பின்’ எனத் தகரம் நிகழ்வுபற்றி வருதலை 226ஆம் நூற்பா உரையிலும், உண்பல் வருவல் உண்ணாநிற்பல் எனப் பகரமும் வகரமும் சிறுபான்மை நிகழ்வுபற்ற வருதலையும், ‘கூடநீர் நின்ற பெற்றிகண்டு இப்பால் நோக்குவேற்கு’ என வகரம் நிகழ்வுபற்றி வருதலையும் 205ஆம் நூற்பா உரையிலும் குறிப்பிட்டுள்ளார்.

இவை யாவும் இவ்வாசிரியரால் இயைபு நோக்கிக் கொள்ளப்பட்டனவாம்.

இல் என்ற எதிர்மறை இடைநிலை இடையே வரும்வழிக் கால இடைநிலைகளும் உடன் வருதல் உண்டு ஆதலின்.

உண்ணாநின்றிலன்-உண் +ஆநின்று + இல் + அன் எனவும், உண்கின்றிலன் - உண் + கின்று +இல் + அன் எனவும், பிழக்கப்பட்டு எதிர்மறைப் பொருளோடு நிகழ்காலம் காட்டுமாறும் அறிக.

சொல் இடைநிலை சொல் இடைநிலை

உண்ணாகிடந்தான் கிட உண்பல் ப்
உண்ணாஇருந்தான் இரு வருவல் வ்