பக்கம் எண் :

298

சொல் இடைநிலை சொல் இடைநிலை
உரைக்கிற்றி ற் நோக்குவேன் வ்
நாடாய் கூறி ற் உண்பேன் ப்
கடத்திர் த்

ஒத்த நூற்பா

முழுதும் நன். 143

எதிர்கால வினைஇடைநிலை

49. பவ மூவிடத்து ஐம்பால் எதிர்பொழுது
இசைவினை இடைநிலை யாம்இவை சிலஇல

இஃது எதிர்காலம் காட்டும் வினைமுற்றுப் பகுபத இடைநிலைகள் இவை எனவும். இவ்விடைநிலைகளைச் சில வினைமுற்றுப் பகுபதங்கள் ஏலா எனவும் கூறுகின்றது.

இ-ள்: பகர வகரங்களாகிய இரண்டு ஒற்றும் மூவிடத்து ஐம்பால்களினும் எதிர்காலம் காட்டும் தெரிநிலை வினைமுற்றுப் பகுபத இடைநிலைகளாம். இம்முக்காலமும் காட்டும் இடைநிலைகளைச் சில வினைப்பகுபதங்கள் ஏலாவுமாம் என்றவாறு.

வரலாறு: உண்பன் உறங்குவன் னவரும். எ ஏனைப்பால் இடங்கள்தோறும் ஒட்டுக. நடப்பி வருவி நடத்துவி எனச்செய்வி என்னும் பொருண்மைக்கண் வரும் முன்னிலை ஏவல் ஒருமை வினைமுற்றுப் பகுபதங்களும் இவ்விடைநிலை பெற்றவாறு காண்க.

உரையிற்கோடலான், உண்பான்அல்லன் ஓதுவான் அல்லன் எனமறைக்கண் இவ்விடைநிலைகள் வேறுசில எழுத்துக்களோடு கூடி எதிர்காலம் காட்டும் எனவும்.