299 ‘அண்க ணாளனை நகுகம் யாமே’ அகம். 32-21 ‘பாடுகம் வாவாழி தோழி’ கலி. 41-1 ‘ஐய சிறிது என்னை ஊக்கி’ கலி. 37-15 உண்டி, ‘ஈதல் மாட்டு ஒத்தி பெரும’ கலி, 86-22 உரைத்தி, தின்றி எனக் கடதறக்களும் சிறுபான்மை எதிர்காலம் காட்டும் எனவும் கொள்க. பிறவும் அன்ன. 12 விளக்கம் : நடப்பி - நட+ப்+ப்+இ-ப்-இடைநிலை வருவி - வா+வ்+இ-வ்-இடைநிலை நடத்துவி - நடத்து +வ்+இ-வ்-இடைநிலை செய்வி என்ற வாய்பாட்டும் பொருள்தரும் வி. பி என்பனவற்றின்கண் எதிர்காலம் காட்டும் வ், ப் என்ற இடைநிலைகள் உண்மையை எடுத்து ஓதினார். உண்பான்அல்லன் -உண்+பான்+அல்+அன் ஓதுவான்அல்லன்-ஓது+வான்+அல்+அன் பகர வகர இடைநிலைகள் ஆன் என்பதனொடு கூடியும் எதிர் காலம் காட்டுவதற்கு இவை எடுத்துக்காட்டு. ‘அண்க ணாளனை நகுகம் யாமே’ ‘பாடுகம் வாவாழி தோழி’ என்பனவற்றில் நகுகம், பாடுகம் என்ற சொற்களின் ககரம் எதிர்காலம் காட்டுதலை நச்சினார்கினியர் சொல். 204ஆம் நூற்பா உரையிலும், ஐய சிறிது என்னை ஊக்கி’ ‘ஈதல் மாட்டு ஒத்தி பெரும்’ எனக் ககரமும் தகரமும் பெற்ற இகரம் ஏவல் கண்ணியே நிற்கும் என்பதனைச் சொல். 225ஆம் நூற்பாவின் உரையிலும் குறிப்பிட்டுள்ளார். ஊக்கி என்பதன்கண் ககரமும், உண்டி என்பதன்‘கண் டகரமும், ஒத்தி என்பதன் கண் தகரமும், தின்றி என்பதன் கண் றகரமும் எதிர்காலம் காட்டின. |