பக்கம் எண் :

300

ஒத்த நூற்பா:

முழுதும் நன். 144

இடைநிலை ஏலா வினைகள்

50. குடுதுறு என்னும் குன்றியல் உகரமொடு
உம்ஊர் கடதற இறுதியும் பம்மார்
மின்என் ஈறும் வியங்கோள் பகுதியும்
ஏவலும் மறையும் என்பன எதிர்வும்
செய்யும் நிகழ்பு எதிர்வும் மெய்பெறத் தரூஉம்.

இது மேல் காலம் காட்டும் இடைநிலைகளைச் சில வினைமுற்றுப் பகுபதங்கள் ஏலா என்றார். அவை இவை என்பதூஉம், அவை இக்காலம் காட்டும் என்பதூஉம் கூறுகின்றது.

இ-ள்; குடுதுறு என்னும் குன்றியலுகர ஈற்று உண்கு உண்டு வருது சேறு முதலிய தன்மை ஒருமை வினைமுற்றுக்களும். உம் என்னும் இறுதி இடைச்சொல்லின் உகரம் ஏறிய கும் டும் தும் றும் என்னும் இவ்வீற்று உண்கும் உண்டும் வருதும் சேறும் முதலிய தன்மைப் பன்மை வினைமுற்றுக்களும், பகர உயிர் மெய்யும் மாரும் என்னும் இவ்வீற்று உரிஞுப உண்ப கொண்மார் முதலிய உயர்திணைப்பன்மை வினை முற்றுக்களும், மின் என்னும் ஈற்று உண்மின் உரிஞு மின் முதலிய முன்னிலைப் பன்மை வினைமுற்றுக்களும் வியங்கோள் திறத்து வரும் கவ்வும் யவ்வும் ரவ்வும் அல்லும் ஆலும் மாரும் உம்மும் மையும் என்னும் இவ்வீற்றுச் செல்கவாழிய வாழியர்

‘மகன்எனல் மக்கட் பதடி எனல்’           குறள். 196

‘மரீஇயது ஒராஅல்’           தொல்.சொல்.443

‘காணன்மார் எமரே’           நற். 64